திருக்குறள்
அதிகாரம்:ஒழுக்கம் உடைமை
திருக்குறள்:138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
விளக்கம்:
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
பழமொழி
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்
Surely will a sinful man incur punishment
இரண்டொழுக்க பண்புகள்
* எனக்கு சிறு பணி கொடுக்கப் பட்டாலும் அவற்றை மிக செம்மையாக செய்து முடிப்பேன்.
* பள்ளிச் சூழலை பசுமையாக பாதுகாப்பேன்.
பொன்மொழி
விளைவுகளை வைத்துதான் செயல்களின் சிறப்பை மதிப்பிட முடியும்.
- ஜவஹர்லால் நேரு
பொது அறிவு
1.42 ஆவது இந்திய சமூக அறிவியல் மாநாடு எங்கு நடைபெற்றது?
ஒடிசா( புவனேஷ்வர்)
2. தேசிய மனித உரிமை ஆணையத்தின் தற்போதைய தலைவர் யார்?
H.L. தத்து
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
கரும்பு
1. கரும்பில் சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது.
2. உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.
3. கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
English words and Meaning
Knit ஒன்று சேர்(பின்னல்)
Knave வஞ்சகன்
Ken அறிவு வரம்பு
Knotty சிக்கலான
Knowledge. அறிவு
அறிவியல் விந்தைகள்
குங்குமப் பூ
*சாஃப்ரான் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இப்பூ உலகின் மிக விலை உயர்ந்த நறுமணப் பொருளாகும். ஒரு கிலோ குங்குமப் பூ விலை 25 இலட்சம் ஆகும்
* ஒரு கிலோ சாஃப்ரான் எடுக்க 1,50,000 பூக்கள் தேவை.
*இப்பூவில் மூன்று சூலகமுடிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் சூல்வித்திலையின் நுனியில் உள்ளன. இப்பூவின் உலர்த்தப்பட்ட சூலகமுடிகளும் சூல் தண்டுகளும் சமையலில் உணவுக்குச் சுவையூட்டும் மற்றும் வண்ணமூட்டும் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
*இச்செடி தோன்றிய இடம் தென்மேற்கு ஆசியாவாகும்.
* இதன் விலை காரணமாக இது சிவப்பு தங்கம் என அழைக்கப்படுகிறது.
Some important abbreviations for students
* BIOS - Basic Input Output System
* BHEL - Bharat Heavy Electronics Limited
நீதிக்கதை
புத்திசாலி வெள்ளாடு
உழவர் ஒருவர் வீட்டில் வெள்ளாடும், செம்மறி ஆடும் இருந்தன. அவை இரண்டும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. எங்கே சென்றாலும் ஒன்றாகவே சென்றன.
உழவருக்கு அவை நன்றாகவே உழைத்தன, ஆனாலும் அவன் சரியாக சப்பாடு போடுவதில்லை, ஒரு நாள் தோட்டத்தில் விளையும் சுவையான செடிகளை அவை கடித்து சாப்பிட்டன், அதை கண்டு கோபம் கொண்ட உழவர், ஆத்திரமாக “நீங்கள் இனிமேல் இங்கே இருக்கக் கூடாது. இருந்தால் உங்களைக் கொன்று விடுவேன். எங்காவது போய் விடுங்கள்” என்று விரட்டினார்.
இரண்டு ஆடுகளும் தங்கள் பொருள்களை ஒரு சாக்குப் பையில் போட்டன. அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டன.
செம்மறி ஆடு வலிமை உள்ளதாக இருந்தது. ஆனால் கோழையாக இருந்தது.
மாறாக வெள்ளாடோ வீரத்துடன் விளங்கியது. ஆனால் வலிமை இல்லாமல் இருந்தது.
சிறிது தூரம் நடந்த இரண்டும் ஒரு வயலை அடைந்தன. அங்கே இறந்து போன ஓநாய் ஒன்றின் தலை கிடந்தது.
அந்த ஓநாயின் தலையை எடுத்துக் கொள். நீதான் வலிமையுடன் இருக்கிறாய், என்றது வெள்ளாடு.
என்னால் முடியாது நீதான் வீரன். நீயே எடு, என்றது செம்மறி ஆடு.
இரண்டும் சேர்ந்து அந்த ஓநாயின் தலையைச் சாக்கிற்குள் போட்டன.
சாக்கைத் தூக்கிக் கொண்டு இரண்டும் நடந்தன. சிறிது தொலைவில் நெருப்பு வெளிச்சத்தை அவை பார்த்தன.
அந்த நெருப்பு எரிகின்ற இடத்திற்குப் போவோம். குளிருக்கு இதமாக இருக்கும். ஓநாய்ளிடம் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம், என்றது வெள்ளாடு.
இரண்டும் நெருப்பு இருந்த இடத்தை நோக்கி நடந்தன. அருகில் சென்றதும் அவை அதிர்ச்சி அடைந்தன.
அங்கே மூன்று ஓநாய்கள் உணவு சமைத்துக் கொண்டிருந்தன.
ஓநாய்கள் தங்களைப் பார்த்து விட்டன. தப்பிக்க வழியில்லை, என்பதை உயர்ந்தன ஆடுகள்.
நண்பர்களே! நீங்கள் நலந்தானே என்று தைரியத்துடன் கேட்டது வெள்ளாடு.
அச்சத்தால் செம்மறி ஆட்டின் கால்கள் நடுங்கின.
நண்பர்களா நாங்களா? எங்கள் உணவு தயார் ஆகட்டும். அதன் பிறகு உங்களைக் கவனிக்கிறோம். எங்கே ஓடிவிடப் போகிறீர்கள்? என்றது ஒரு ஓநாய்.
இவற்றிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது வெள்ளாடு.
செம்மறி ஆடே! இன்று நாம் கொன்றோமே ஓநாய்கள். அவற்றில் ஒன்றின் தலையை எடுத்து இவர்களிடம் காட்டு. நாம் யார் என்பது புரியும்? என்று உரத்த குரலில் சொன்னது அது.
செம்மறி ஆட்டிற்கு அதன் திட்டம் புரிந்தது. சாக்கிற்குள் கையை விட்டு ஓநாயின் தலையை எடுத்தது.
ஏ! முட்டாள் ஆடே! பெரிய ஓநாயின் தலையை எடுத்துக் காட்டு என்றேன். நீ சிறிய தலையை எடுத்துக் காட்டுகிறாயே, பெரியதை எடு, என்று கத்தியது வெள்ளாடு.
அந்தத் தலையைச் சாக்கிற்குள் போட்டது செம்மறி ஆடு. மீண்டும் அதே தலையை வெளியே எடுத்துக் காட்டியது. கோபம் கொண்டது போல் நடித்தது வெள்ளாடு. இருக்கின்ற ஓநாய்த் தலைகளில் பெரியதை எடு. மீண்டும் நீ சிறிய தலைகளையே எடுத்துக் காட்டுகிறாய். இதைப் போட்டுவிட்டு பெரிய தலையாக எடு, என்று கத்தியது.
அந்தத் தலையைப் போட்டுவிட்டு அதே தலையை மீண்டும் வெளியே எடுத்தது செம்மறி ஆடு.
இதைப் பார்த்த மூன்று ஓநாய்களும் நடுங்கின.
இவை சாதாரண ஆடுகள் அல்ல. நீ அவற்றைக் கேலி செய்திருக்கக் கூடாது. சாக்கிற்குள் இருந்து ஒவ்வொரு ஓநாய்த் தலையாக எடுக்கின்றன, என்றது ஒரு ஓநாய். மூன்றும் சிறிது நேரம் அமைதியாக இருந்தன.
ஆடுகளைப் பார்த்து ஓநாய் ஒன்று, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, குழம்பு நன்றாகக் கொதிக்கிறது, இன்னும் சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும், நான் சென்று தண்ணீர் கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது.
சிறிது நேரம் சென்றது. இரண்டாவது ஓநாய், அந்த ஓநாயிற்கு நம் அவசரமே தெரியாது. போய் எவ்வளவு ஆகிறது? நான் சென்று அதை அழைத்துக் கொண்டு தண்ணீருடன் வருகிறேன், என்று புறப்பட்டது.
பரபரப்புடன் இருந்த மூன்றாவது ஓநாய், இருவரும் எங்கே தொலைந்தார்கள்? நான் சென்று அவர்களை அழைத்து வருகிறேன் என்று புறப்பட்டது. தப்பித்தோம் என்ற மகிழ்ச்சியில் ஓட்டம் பிடித்தது.
செம்மறி ஆடே! நம் திட்டம் வெற்றி பெற்று விட்டது. ஓநாய்களிடம் இருந்து தப்பித்து விட்டோம். விரைவாகச் சாப்பிட்டுவிட்டு இங்கிருந்து புறப்படுவோம். உண்மை தெரிந்து மீண்டும் அவை இங்கே வரும், என்றது வெள்ளாடு.
இரண்டும் அங்கிருந்த உணவை வயிறு முட்ட உண்டன. மகிழ்ச்சியுடன் ஏப்பம் விட்டுக் கொண்டே புறப்பட்டன. ஓடிய மூன்று ஓநாய்களும் வழியில் சந்தித்தன.
ஆடுகளுக்குப் பயந்தா நாம் ஓடி வருவது? என்று கேட்டது ஒரு ஓநாய்.
நம்மை அவை ஏமாற்றி இருக்கின்றன. நாமும் ஏமாந்து விட்டோம், என்றது இன்னொரு ஓநாய்.
மூன்றாவது ஓநாய், நாம் உடனே அங்கு செல்வோம், அவற்றைக் கொன்று தின்போம், என்றது. மூன்று ஓநாய்களும் அங்கு வந்தன. உணவை உண்டு விட்டு இரண்டு ஆடுகளும் ஓடி விட்டதை அறிந்தன.
புத்திசாலித்தனத்தால் ஆடுகள் உயிர் தப்பியதை கண்டு ஏமாந்து போன ஓநாய்கள் பற்களை நறநறவென்று கடித்தன. பாவம் அவற்றால் வேறு என்ன செய்ய முடியும்?
உயிர்தப்பிய ஆடுகள் தன் எஜமானனை நினைத்துப் பார்த்தன, அவரிடம் இருந்தவரை உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்படவில்லை, எனவே அவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் சேர்ந்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தன, அதே நேரத்தில் ஆடுகளை பிரிந்த உழவர் தன் தவற்றை உணர்ந்து ஆடுகளுக்கு நன்றாக தீனி போடுவது என்று தீர்மானித்து ஆடுகளை தேடி காட்டிற்கு வந்தார், எதிரே வந்த ஆடுகள் ஓடி போய் உழவரிடம் மன்னிப்பு கேட்டது, உழவரும் மன்னிப்பு கேட்டு, ஆடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து ருசியான இலைகளை கொடுத்தார்.
இன்றைய செய்திகள்
18.01.2019
* ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் புதிய அசல் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் வசதி தொடக்கம்: ரூ.50 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
* வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்து ரீஃபண்டுக்காக இனிமேல் 63 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ரிட்டர்ன் தாக்கல் செய்த ஒருநாளில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை அடுத்த ஆண்டில் நடைமுறைக்கு வருகிறது.
* திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி - மத்திய மந்திரிசபை ஒப்புதல்அளித்துள்ளது.
* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; 3-வது சுற்றுக்கு பெடரர், வோஸ்னியாக்கி தகுதி.
* குஜராத்தை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 62 வருட ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக கேரள அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
Today's Headlines
🌹 If the Aadhar card is lost, the facility for applying for a new original Aadhaar card is available for Rs 50
🌹 There is no need to wait for 63 days to refund the money after filing the returns. The method of receiving money in one or two day of filing returns comes into effect from next year.
🌹Additional funding for the Tiruvarur Central University - Central Cabinet has approved.
🌹 Australian Open Tennis; Federer, vosniyaki Qualified for the 3rd round.
🌹In the 62-years of Ranji Trophy, the Kerala team has been advancing to the semi-finals for the first time💐
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...