21ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் LKG ,UKG வகுப்புகள் துவக்கம்

அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கற்றலை ஊக்குவிக்கும் வகையில், எல்.கே.ஜி., வகுப்புகள், 21ம் தேதி துவங்கப்பட உள்ளன.பல மாநிலங்களில், அரசு பள்ளிகளில், ஆங்கிலம் மற்றும் ஹிந்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில், சில அரசு பள்ளிகளில் மட்டும், ஆங்கில வழி வகுப்புகள் உள்ளன. அதனால், பெரும்பாலான மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்கின்றனர். 


நடவடிக்கை இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், ஆங்கில வழி கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகின்றன. ஏற்கனவே, மாதிரி பள்ளிகளில், இந்த வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.இதையடுத்து, தொடக்கப் பள்ளிகளிலும் துவங்குவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், தொடக்கப் பள்ளிகளின் அருகில் உள்ள, 2,000 அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. இவற்றில், 59 ஆயிரம் குழந்தைகள் படிக்கலாம்.2 மணி நேரம்தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள், அங்கன்வாடி களுக்கு சென்று, தினமும், இரண்டு மணி நேரம் பாடம் எடுக்க உள்ளனர். இந்த திட்டம், 21ம் தேதி துவங்கப்படவுள்ளது.

Share this

0 Comment to " 21ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் LKG ,UKG வகுப்புகள் துவக்கம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...