பள்ளிகளில் 7 ஆண்டுகளாக வேலை செய்யும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ₹7,700
வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது புதிய தற்காலிக ஆசிரியர்களுக்கு ₹10 ஆயிரம்
வழங்குவது எப்படி என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள்
கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்தமிழ்நாடு அனைத்து பகுதிநேர
ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்
வெளியிட்டுள்ள அறிக்கை: 2012ல் ஜெயலலிதா ஆட்சியில் ₹5000 தொகுப்பூதியத்தில்
அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள்
மூலம் காலை, மாலை என இருவேளைகளிலும் தலைமையாசிரியர்களின் உத்தரவின்படி
செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு வாரத்தில் 3 அரைநாட்கள் என மாதத்தில்
12 அரைநாட்கள் மட்டுமே பள்ளிக்கு வருகைபுரிந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டது.
2015, 2016, 2017 ஆண்டுகளில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த
போராட்டங்களின்போது பள்ளிகளை பொறுத்தவரை பள்ளிக்கல்வி செயலர், இயக்குநர்,
முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு பகுதிநேர
ஆசிரியர்களே முழுநேரமும் பணியாற்றிட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். .
இந்த நிலையில் வேலைநிறுத்தத்தை முடிக்க மாற்று ஏற்பாடாக
தற்காலிக ஆசிரியர்கள் ₹7500 தொகுப்பூதியத்தில் நியமிப்பதாக அரசு முதலில்
அறிவித்த்து. பிறகு அடுத்த நாளே ₹2500 உயர்த்தி ₹10000 சம்பளமாக
அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தை முறியடிக்க தற்காலிக ஆசிரியர்கள்
அறிவிப்பு நிலையிலேயே முதலில் ₹.7500, பிறகு ₹10000 என அரசாணை வெளியிடும்
அரசு 7 வருடமாக பள்ளிகளில் உழைத்துவரும் 12000 பகுதிநேர ஆசிரியர்களுக்கு
உரிய ஊதிய உயர்வை தரவில்லை. 7 வருடமாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின்
பணிநிரந்தர கோரிக்கையை காதுகொடுத்து கேட்காத அரசு, இதுபோன்ற வேலைநிறுத்த
நாட்களில் மட்டும் பகுதிநேர ஆசிரியர்களை பயன்படுத்தி பள்ளிகளை திறப்பதை
தொடர்ந்து கையாண்டுவருவது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துவருகின்றனர்.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» முதல்நாள் ரூ.7500, அடுத்த நாளே ரூ.10,000 ஸ்டிரைக்கின்போது முழுநேர வேலையா? : பகுதிநேர ஆசிரியர்கள் குற்றச்சாட்டு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...