PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

ஸ்டிரைக் ஊழியர்கள் மீது பாய்கிறது நடவடிக்கை - எஸ்மா?

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக, பொது மக்களின் அத்தியாவசிய சேவை பாதிக்கப் பட்டுள்ளதால், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, 'எஸ்மா' சட்டத்தில், நடவடிக்கை எடுக்க,தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், திடீர் மறியல் போராட்டம் நடத்திய, அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அதேநேரத்தில், பேச்சு நடத்த வருமாறும், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பு மாறும், அரசு தரப்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங் களின் கூட்டமைப்பான, ஜாக்டோ-ஜியோ சார் பில், ஜன., 22 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.'பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; இடைநிலைஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இந்த போராட்டம் நடக்கிறது. இதனால், அரசு நலத் திட்ட பணிகள், லோக்சபா தேர்தல் ஆயத்தப் பணிகள், 'கஜா' புயல் நிவாரணப் பணிகள், சுகாதார பணிகள், மத்திய அரசின் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.


ஆசிரியர்கள் பணியை புறக்கணித்ததால், மாணவர் களுக்கான பொதுத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுக்கான முன்னேற்பாடுகளும் முடங்கி உள்ளன. கிராமப்புறங்களில், தொடக்க பள்ளிகளுக்கு பூட்டு போடப்பட்டு உள்ளதால்,
மாணவர்கள், பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க, மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், புதிய ஆசிரியர்களை, தற்காலிகமாக நியமிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஆள் எடுப்பு பணிகளும், தீவிரம் அடைந்துள்ளன. இன்று, ஞாயிற்று கிழமையும், ஆள் எடுப்பு பணி நடக்கிறது.


பள்ளிக் கல்வித் துறை, வருவாய் துறை அதிகாரி கள் நடத்திய விசாரணைகளில், போராட்டத் தின் பின்னணியில், சில அரசியல் கட்சிகள் ஆதரவில் செயல்படும், சங்க நிர்வாகிகள் உள்ளதை கண்டறிந்து உள்ளனர். உளவு போலீசாரும், இதை உறுதிபடுத்தி உள்ளனர்.எனவே,
போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, பொது மக்களுக்கான இன்றியமையாத சேவைகள் பராமரிப்பு சட்ட மான, 'எஸ்மா' மற்றும் தமிழ்நாடு இன்றியமை யாத சேவைகள் பராமரிப்பு சட்டமான, 'டெஸ்மா' ஆகியவற்றின் கீழ், கடும் நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.


அதற்கு முன்னதாக, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, பணிக்கு வராத, 1 லட்சம் பேருக்கு, தமிழக அரசின் பணியாளர் நடத்தை விதிகள் படி, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பும் பணி நடந்து வருகிறது. நாளைக்குள் பணிக்கு வராவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையில், ஜாக்டோ - ஜியோவின் போராட்டம் தொடர்பான
வழக்கு, நாளை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.


அதேபோல, ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், நாளை, மதுரையில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் நிலையை பொறுத்து, போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து, இதில் இறுதி முடிவெடுக்கப் பட உள்ளது.போராட்டம் தீவிரமடைந்து வருவதால், போலீசார் கைது நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். திடீர் மறியலில் ஈடு பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், முக்கிய நிர்வாகிகள், சிறையில் அடைக்கப் பட்டனர்; கைது நடவடிக்கை தொடர்கிறது.இது, போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மாநிலம் முழுவதும், போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய, 500க்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்க பட்டுள்ளனர்.அதேநேரத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை, பேச்சு நடத்த வருமாறு, பள்ளிக் கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் தரப்பில் அழைப்பு விடப்பட்டு உள்ளது. ஆனால், முதல்வர் நேரடி யாக பேச்சு நடத்த வேண்டும் என, போராட்டக் காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந் நிலையில், 'அரசுக்கு கடும் நிதிச்சுமை உள்ள தால், கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது; போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோர் பணிக்கு திரும்ப வேண்டும்' என்று, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர், ஜெயகுமார் கூறியுள்ளார்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group