அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: வைகோ

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ - ஜியோ) சார்பில் ஜனவரி 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு, லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தி நடத்தி வருவது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுடன் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்

Share this