சோற்றுக்கற்றாழை சாறை குடிப்பதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம், அதிலிருக்கும் வைட்டமின், மினரல் மற்றும் அமினோ அமிலங்கள் தான். இனி கற்றாழைச் சாறின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
தினமும் சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால், நம் உணவினை ஜீரணிக்கும் அமைப்பு சுத்தம் செய்யப்படுகிறது.இதனால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதில்லை. மேலும், குடலையும் சுத்தம் செய்து மலச்சிக்கலையும் தடுக்கிறது. வயிற்றுப்போக்கு காலங்களில் அதனை குறைக்கவும் உதவுகிறது.
தினமும் இச்சாறை குடிப்பதால், உடலை நல்ல நிலையில் வைத்திருக்க முடியும். அதேபோல், உடல் சக்தியை அதிகரிக்கவும் முடியும்.
சோற்றுக் கற்றாழையின் மேல் தோலை சீவி அதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை சிறு துண்டுகளாக நறுக்கி 3 துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்.பின்பு இவற்றின் மீது சீரகத் தூளை தடவி ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக விழுங்கவும்.இவ்வாறு வெறும் வயிற்றில் அதிகாலை உண்டு வர வயிற்றில் உள்ள புண்கள் ஆறும்.வயிற்றெரிச்சல் குணமாகும்.
நம் உடலில் இருக்கும் நச்சுப் பொருட்களை நீக்கவும் இச்சாறு உதவுகிறது.மூட்டுகளை வலுப்படுத்துகிறது. இதனால் மூட்டு தசைகளில் ஏற்படும் வலி, கட்டி, வீக்கம், சுளுக்கு போன்றவற்றையும் இந்த சோற்றுக்கற்றாழையால் கட்டுப்படுத்த உதவுகிறது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments