பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்மாதிரியாக விளங்கும் அரசுப்பள்ளி :
 தமிழக அரசு ஜனவரி 1,2019 முதல் 14 வகைப்பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதைத்திருக்கிறது. இதை கடைபிடிப்பதற்கே மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் இவ்வேளையில் கிடந்த ஆறு மாதத்திற்கு முன்பே தன் பள்ளியில் அனைத்து வகையான பிளாஸ்டிக்கையும் ஒழித்து இன்று 100 %பிளாஸ்டிக் இல்லா பள்ளியாக திகழ்கிறது புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள ஆவணத்தாங்கோட்டை-மேற்கு நடுநிலைப்பள்ளி. ஆகஸ்ட் 15 முதல் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் பிளாஸ்டிக் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. மாணவர்களுக்கு பிளாஸ்டிக் இல்லா மெட்டல் பேனா, காகித பேனா, மெட்டல் மற்றும் மரத்தாலான ஸ்கேல் என அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களும், ஆசிரியர்களும் உணவு கொண்டு வர மஞ்சள் பை, தண்ணீர் கொண்டு வர சில்வர் வாட்டர் பாட்டில் மற்றுமே பயன்படுத்துகின்றனர். பள்ளியில் ஆசிரியர் அமரும் இருக்கை, குப்பைத்தொட்டி, குடிநீர் கேன்  அனைத்து பொருட்களும் பிளாஸ்டிக் இல்லா பொருட்களாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்மாதிரியாகவும்,அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளங்கும் இப்பள்ளியை மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 

 
 

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments