பழைய செல்களையே அதிக ஆசிரியர்கள் பயன்படுத்துவதால் செல்போனில் மாணவர்கள் வருகை பதிவு திட்டத்தில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டார செயலாளர் பாலசண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமீப காலமாக கல்வித்துறையில் தினம் ஓர் அறிவிப்பு வெளியாகிறது. இவை மாற்றத்திற்கான முயற்சியாக சொல்லபட்டாலும் நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. கடந்த 3.1.2019 அன்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் உத்தரவை பின்பற்றி முதன்மை கல்வி அலுவலர் 4ம் தேதி வெளியிட்டுள்ள கடிதத்தில், வரும் 7ம் தேதிக்குள் மாணவர்கள் வருகைப் பதிவு செயலியை பயன்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை என்று உத்தரவிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக மாணவர்கள் வருகையை வருகைப் பதிவேட்டில் ஆசிரியர்கள் தங்கள் கைப்பட பதிவு செய்து வந்தார்கள். ஆனால் கூடுதல் பணியாக தற்போது ஆசிரியர்கள் தங்கள் கைப்பேசிகளில் வருகைபதிவு செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் மாணவர்கள் வருகைப்பதிவை ஒரு நாளைக்கு இரண்டு முறை பதிவேற்றம் செய்ய கல்வித் துறை அழுத்தம் கொடுக்கிறது. இச்செயலியை பயன்படுத்தும் போது பல்வேறு நடை முறை சிக்கல் உள்ளது.
30 சதவீத ஆசிரியர்கள் பழைய செல்போன்களையே பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் இன்னும் ஆன்ட்ராய்டு செல்போனுக்கு மாறவில்லை. அரசு அறிவித்துள்ள செயலியை பயன்படுத்த தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு எந்த பயிற்சியும் தரவில்லை. இச்செயலியில் மாணவர்கள் வருகையை நகர்ப்புற பள்ளிகளில் பயன்படுத்த ஆகும் நேரத்தை விட தொலைத் தொடர்பு பிரச்னைகளால் அதிக நேரம் ஆனால் கற்விக்கும் பணி பாதிக்கும்.

மேலும் இந்த செயலியில் கால தாமதத்துடன் வரும் மாணவர்கள் வருகையையும், பெற்றோர்கள் முன்கூட்டியே அழைத்து செல்லும் மாணவர்கள் பற்றி திருத்தம் செய்ய இடமில்லை. இது இரட்டிப்பு வேலையாக இருக்கும். தற்போது மூன்றாவது பருவம் தொடங்கி 5 நாட்கள் ஆகியும் மாணவர்களுக்கு விலையில்லா குறிப்பேடுகள் வழங்கப்படவில்லை.
இதுபோன்று அத்தியாவசிய பணிகளில் கவனம் செலுத்தாமல் கற்பித்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுதும் நடவடிக்கைகளில் ஆசிரியர்களை ஈடுப்படுத்துவதை கல்வித்துறை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments