அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார். கைதானவர்களை விடுதலை செய்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாகை, கிருஷ்ணகிரி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Share this