மாணவ, மாணவிகளின் அறிவியல், கணித அறிவை மேம்படுத்த கல்விச் சுற்றுலா !!

சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கில் பல்வேறு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலா சென்றனர்.

மத்திய அரசின் சர்வ சிக் ஷா அபியான் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் அறிவியல் மற்றும் கணித அறிவை மேம்படுத்தும் வகையில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அதன்படி, சென்னையில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 300 பேர் தேர்வு செய்யப்பட்டு, பிர்லா கோளரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்த மாணவ, மாணவிகளுக்கு பிர்லா கோளரங்க ஆய்வாளர்களும், நிர்வாகிகளும், வானியல் மற்றும் புவியியல் தொடர்பான ஒளிப்படங்களைக் காட்டி விளக்கினர்.

Share this