அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

தமிழகத்தில் ஜனவரி 22 இல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். எனவே, அவர்களிடம் தமிழக அரசு  பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு  தீர்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
 விருதுநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்த
தேர்தல் வாக்குறுதிபடி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்றம் சென்றனர்.
நீதிமன்றம் உத்தரவிட்டும், கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு வாய்தா வாங்கி வருகிறது.
இதனால், வேறு வழியின்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஜன., 22 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். எனவே, தமிழக அரசு அவர்களை அழைத்துப் பேசி சுமுக தீர்வு காண வேண்டும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் அமெரிக்கன் புழு தாக்குதலால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இப் பயிரை பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏற்று கொண்டதற்கும், ஹெக்டேருக்கு ரூ.13,500 நிவாரணம் வழங்க முன் வந்ததற்கும் அரசுக்கு நன்றி. இந்த நிவாரண தொகையை ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் டெல்டா மாவடங்களில் கஜா புயல் மற்றும் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  என்றார்

Share this

0 Comment to "அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...