உலக வங்கியின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த இந்திரா நூயி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. உலக வங்கியின் தற்போதைய தலைவராக இருக்கும் ஜிம் யோங் கிம், தற்போது தனது
பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் பிப்ரவரி மாதம் பணியில்
இருந்து விலக போவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த பதவிக்கான புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் நடந்து
வருகிறது. ஆலோசனை நடைபெறுகிறது
இதற்கான ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகிறது. இந்த ஆலோசனைக்கு பின் சில
நபர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்படும். அதன்பின் அமெரிக்க அதிபர்
டிரம்ப் அதிலிருந்து ஒரு நபரை தலைவர் பதவிக்கு தேர்வு செய்வார்.
யார்
யார் இருக்கிறார்
இந்த கமிட்டியில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பும்
இருக்கிறார். முதலில் இவாங்கா டிரம்ப்தான் தலைவர் பதவிக்கு தேர்வு
செய்யப்படுவார் என்று தகவல்கள் வந்தது.
இந்த நிலையில் இவாங்கா டிரம்ப் தற்போது இந்திரா நூயியின் பெயரை பரிந்துரை
செய்துள்ளதாக தகவல்கள் வருகிறது.
யார் இவர்
யார் இந்திரா நூயி
இந்திரா நூயி தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது பூர்வீகம் சென்னை ஆகும்.
பெப்ஸிகோ நிறுவனத்தின் முதல் பெண் தலைமை செயலதிகாரி ஆவார் இந்திரா நூயி.
பெப்ஸிகோவில் மிகவும் சிறப்பாக செயலாற்றி உலகப் புகழ்பெற்ற இவர் கடந்த 2018
ஆகஸ்ட் மாதம் தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகினார்.
சிறப்பு
சிறப்பான பணி
12 வருடமாக அவர் பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக
இருந்துள்ளார்.
அந்த நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்தது இவர்தான் என்பது
குறிப்பிடத்தக்கது. இவர் பெரும்பாலும் உலக வங்கியின் தலைவராக அறிவிக்கப்பட
வாய்ப்பு இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
தமிழன் பெருமையை உலக நாடுகள் உணரும். ஆனால் தமிழன் உணர்வது எப்போது?இந்திரா நூயி அவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete