தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகைப் பிரிவு) பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டுள்ளன.


காவல்துறை சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வானது கடந்த டிசம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மையங்களில் நடைபெற்றது.இதில், 22 ஆம் தேதி நடந்த காவல் துறையை சேர்ந்தவர்களுக்கான எழுத்துத் தேர்வில் 2,608 பேரும், 23 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பொதுத்தேர்வர்களுக்கான எழுத்துத் தேர்வில் 34,933 பேரும் தேர்வு எழுதினர்.

இந்தத் தேர்வின் முடிவுகள்  www.tnusrbonline.org  என்ற இணையத்தளத்தில் நேற்று சனிக்கிழமை (ஜன.5) வெளியிடப்பட்டுள்ளது.


தேர்வு முடிவுகளை மேற்கண்ட இணையதள முகவரியில் சென்று தேர்வாளர்கள் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments