*36 ஆண்டு காலமாக சத்துணவுத் திட்டத்தில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் என வழங்குவதை கைவிட்டு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம், குறைந்த பட்ச குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினரும் கலந்துகொண்டுள்ளனர்.
*இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் ஆசிரியர்கள் பணிக்கு வராததை ஈடுகட்டும் வகையில் அந்தந்த பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்துவோம் என்று அரசு அறிவித்துள்ளது, எங்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. இதை சத்துணவு ஊழியர் சங்கம் வண்மையாக கண்டிக்கிறது.
*ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சத்துணவு ஊழியர்களும் முழுமையாக பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்பதை அரசுக்குஇதன்மூலம் தெளிவுபடுத்துகிறோம்.
*சத்துணவு ஊழியர்களை ஆசிரியர் பணி செய்யச்சொல்வதை சத்துணவு ஊழியர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
* _ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் தொடர்ந்து பங்கேற்போம்.
*欄தோழமையுடன்;*
*_ப.சுந்தராம்பாள்,_*
*மாநிலத் தலைவர்.*
*_இரா.நூர்ஜஹான்,_*
*பொதுச்செயலாளர்.*
*_பே.பேயத்தேவன்,_*
*மாநிலப் பொருளாளர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...