இடைநிலை ஆசிரியர்களின் தகுதி விபரம் கோரும் உயர்நீதிமன்றம்

முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு
5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் தகுதி விபரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.அங்கன்வாடி மையங்களில் சமூகநலத்துறை சார்பில் எல்.கே.ஜி.,மற்றும் யூ.கே.ஜி.,வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு, துவக்கப் பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கலாகின. நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் விசாரித்தார்.மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், ''துவக்கக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்களை வேறு துறைக்கு மாற்ற முடியாது. விதிகளை பின்பற்றாமல் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.நீதிபதி: பள்ளிக் கல்வித்துறையில் குழப்பங்கள் உள்ளதை இது வெளிப்படுத்துகிறது. உரிய 'கிண்டர் கார்டன்' பயிற்சி பெறாத ஆசிரியர்களை எப்படி எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி.,வகுப்புகளுக்கு நியமிக்க முடியும். 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் தகுதி விபரங்களை இன்று (ஜன.,23) தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்

Share this

0 Comment to "இடைநிலை ஆசிரியர்களின் தகுதி விபரம் கோரும் உயர்நீதிமன்றம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...