வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வு முடிவுகள்

வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டின்படி பிரிவு வாரியாக தற்போது இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு முடிவுகள் அடுத்த சில நாள்களில் வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வு கடந்த மாதத்தில் நடைபெற்றது.

இத்தேர்விற்கான முடிவுகளும், அடுத்தகட்ட தேர்வு குறித்த தகவல்களும் தற்போது www.forests.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இணையவழி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடற்தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் விரைவில் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this