பத்தாம் வகுப்பு பொது தேர்வு விண்ணப்பிக்க அவகாசம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க
விரும்பும் தனி தேர்வர்கள், ஜன., 7 முதல், 14ம் தேதி வரை, விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டது. ஆனால், 14ம் தேதி, அரசு விடுமுறை என்பதால், அன்று, தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை.
14ம் தேதி விண்ணப்பிக்க முடியாதோர், இன்றும், நாளையும் விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தேர்வில் பங்கேற்பதற்கான தகுதிகள், நிபந்தனைகள், தேவைப்படும் சான்றிதழ்கள் மற்றும் சேவை மையங்களின் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மாவட்ட கல்வி அலுவலகங்கள், தேர்வு துறை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும், தேர்வு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்

Share this