அங்கன்வாடிகளில் தொடக்கப்பட உள்ள எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் ஏற்கனவே பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை தரம் இறக்கி பணிபுரிய வைப்பதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி ஆங்கில வகுப்புகள் துவங்க அரசாணை வெளியிடப்பட்டு, ஜன.21 முதல் செயல்பட உள்ளது. இதில் பணிபுரிவதற்காக மாநிலம் முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஒன்றிய அளவிலான பணியில் இளையோராக உள்ள உபரி பெண் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளனர்.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அருகில் உள்ள ஒன்றியங்களிலிருந்து ஆசிரியர்களை பணியமர்த்த கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 69 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

இதில் 39 பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க மாவட்ட கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. மீதமுள்ள 30 பணியிடங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அங்கன்வாடி பணியில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments