மொபைல் போன் செயலியில் வருகைப்பதிவு மேற்கொள்ளும் திட்டம் தொய்வு பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளுமாறு C.E.O களுக்கு உத்தரவு

மொபைல் போன் செயலியில் வருகைப்பதிவு மேற்கொள்ளும் திட்டம் தொய்வடைந்துள்ளதால், பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளுமாறு, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர், ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளும் விதமாக, 'டிஎன் அட்டென்டன்ஸ்' என்ற பிரத்யேக 'ஆப்', கடந்த அக். மாதம் வெளியிடப்பட்டது. இதில், காலை, மதியம் ஆகிய இருவேளைகளில், வருகை புரியாதோர் தகவல் பதிவேற்ற வேண்டும்.சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச்செயலியில், சில தொழில்நுட்ப குளறுபடி இருந்ததால், பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள, கடந்த நவ., மாதம் உத்தரவிடப்பட்டது. தற்போது சிக்கல்கள் களையப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட இந்த செயலியில், அனைத்து பள்ளிகளிலும் வருகைப்பதிவு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.ஒருங்கிணைந்த கல்வித்திட்ட இயக்குனர் சுடலை கண்ணன் வெளியிட்ட அறிக்கை:மாணவர் வருகைப்பதிவு செயலி, நவ., மாதத்திற்கு பின், மேம்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்த அறிவுறுத்தியும், சில பள்ளிகள், வருகைப்பதிவு மேற்கொள்ளவில்லை. சோதனை முறையிலான இம்முயற்சிக்கு பள்ளிகள் ஒத்துழைப்பது அவசியம். மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, செயலி மூலம் வருகைப்பதிவு மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். செயலியில் உள்ள பின்னுாட்டம் பகுதியில், கல்வி அதிகாரிகள் கருத்து தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Share this

0 Comment to "மொபைல் போன் செயலியில் வருகைப்பதிவு மேற்கொள்ளும் திட்டம் தொய்வு பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளுமாறு C.E.O களுக்கு உத்தரவு "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...