ஒவ்வொரு வருடமும் மாத சம்பளக்காரர்கள் தவறாமல் செய்யும் வருமான வரித் தாக்கல் அறிக்கை சமீப காலத்தில் தொடர்ந்து எளிமையாக்கப்பட்டும், மெருகேற்றப்பட்டும் வருகிறது.
இதன் தொடர்ச்சியாகத் தற்போது வருமான வரி செலுத்துவோருக்கு அறிக்கை தாக்கல் செய்த ஒரே நாளில் வரிப் பணத்தை ரீபண்ட் செய்யும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் 4,242 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில் ஈ-பைலிங் மற்றும் சென்டரல் பிரசாசிங் தளத்தை ஒன்றிணைக்கப்பட உள்ளது. இதன் வாயிலாகவே ஒரு நாளில் வரிப் பணத்தைத் திரும்ப அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் வருமான அறிக்கையைச் சரிப்பார்க்கும் நேரமும், பணத்தைத் திரும்பச் செலுத்த ஆகும் நேரமும் 95 சதவீதம் வரையில் குறைக்கப்படும். தற்போது வருமான வரி அறிக்கை தாக்கல் மற்றும் அறிக்கை சரிபார்க்கப்பட்ட பின் 63 நாட்களில் வரிப் பணம் திரும்ப அளிக்கப்படுகிறது.
மேலும் இந்தத் திட்டத்தை நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் செயல்படுத்த உள்ள நிலையில், அடுத்த 18 மாதத்தில் இதன் நடைமுறைப்படுத்தப்படும். இதை 15 மாதங்களிலும் நடைமுறைப்படுத்த கூடும் எனவும் கூறப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும் 2020 நிதியாண்டில் இது நடைமுறைக்கு வரும் என்பது உறுதி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...