குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளை இணைக்கும் எவ்வித திட்டமும் இல்லை

இரு தேர்வுகளும் ஒரே மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என, டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்
டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வு திட்ட அட்டவணை, நேற்று முன்தினம் வெளியானது
இதில், குரூப் 1, 2, 2ஏ, 4 உள்ளிட்ட அனைத்து முக்கிய தேர்வுகளும், இந்த ஆண்டுக்கான அட்டவணையில் வந்திருப்பது, தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இருப்பினும், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒரே மாதத்தில் குறிப்பிட்டிருப்பது, தேர்வர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது
கடந்தாண்டு, குரூப்4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகள் ஒருங்கிணைத்து நடத்தியதும், இக்குழப்பத்துக்கு முக்கிய காரணம்
இது தொடர்பாக, சமூகவலைத்தளங்களில், குரூப் 2, 2ஏ தேர்வுகள் இணைக்கப்பட்டு விட்டதாகவும், முதன்மை தேர்வுகளுக்கு பதிலாக இரண்டுக்கும் பொதுவாக முதல்நிலை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் தகவல் பரவியுள்ளது
டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் நந்தகுமாரிடம்கேட்டபோது, ''இரண்டு தேர்வுகளையும் ஒரே மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்
ஆனால், தேர்வுகளை ஒருங்கிணைக்கும் எவ்வித திட்டமும் தற்போது இல்லை. மாற்றம் இருப்பின், முன்கூட்டியே தெரிவிப்போம்,'' என்றார்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments