வாக்காளர் வழிகாட்டி இணையதளத்தில் வெளியீடு

தேர்தலில் ஓட்டளிப்பது எப்படி என்பதை, படங்களுடன் விளக்கும், வாக்காளர் வழிகாட்டி, தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், 18ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, ஓட்டு போட செல்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை, ஓட்டுச்சாவடியில் நுழைந்த பின் செய்ய வேண்டியவை மற்றும் ஓட்டு போடுவது எப்படி என்பது குறித்தும், படங்களுடன் விளக்கும் வாக்காளர் வழிகாட்டியை, தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது.
இந்த வழிகாட்டி, ஆணையத்தின், www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்கள் தங்களுடைய பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிய, என்ன செய்ய வேண்டும் எனவும், ஓட்டுச் சாவடிகளில் உள்ள வசதிகள் குறித்த விபரங்களும், வழிகாட்டியில் இடம் பெற்றுள்ளன.

Share this

1 Response to "வாக்காளர் வழிகாட்டி இணையதளத்தில் வெளியீடு "

Dear Reader,

Enter Your Comments Here...