++ இன்றைய முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி சார்ந்து அறிவுரை! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
மதிப்பிற்குரிய அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் வணக்கம்.
TNTP Portal ஆனது அனைவரும் இணையத்தை அணுவதன் காரணமாக முற்றிலும் முடங்கி இருக்கிறது. 
நேற்று முடிக்கவேண்டிய தலைமையாசிரிய பெருமக்களுக்கான பயிற்சி கூட இன்னும் முடிவடையாமல் உள்ளது.

சர்வர் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே உள்ளே நுழைய முடியாத சூழல் உள்ளது.

மேலும் இப்பயிற்சியானது அனைத்து தலைமை ஆசிரியர் பெருமக்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு பயிற்சி கட்டகமாகவே இருக்கிறது.

இன்னும் இரண்டு வார காலத்திற்கு இப்பயிற்சி கட்டகமானது இணையத்தில் enable mode ல் இருக்கும் .

ஆகவே, தாங்கள் விரும்பும் நேரத்தில் இப்பயிற்சியை இரண்டு வார காலத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் முடித்து , அதில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளித்து பயிற்சியை நிறைவு செய்ய முடியும்.

ஆகவே ஆசிரிய சகோதரர்கள் அனைவரும் பதட்டப்படாமல் பொறுமையாக இப்பயிற்சியை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம்.
நன்றி.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...