Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.12.21

  

 

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: அரணியல்

அதிகாரம்: நாடு

குறள் எண் : 734

குறள்:
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

பொருள்:
மிகுந்த பசியும், நீங்காத நோயும், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.

பழமொழி :

Early sow, early now


பருவத்தே பயிர் செய்

இரண்டொழுக்க பண்புகள் :

1. காடழிந்தால் மழை கெடும் எனவே இயற்கை போற்றி பாதுகாப்பேன். 

2. மழை அழிந்தால் விவசாயம் கெடும், விவசாயம் கெட்டால் உணவு அழியும். எனவே விவசாயம் பேணி பாதுகாப்பேன்

பொன்மொழி :

இறக்கத்தான் பிறந்தோம். வாழும் வரை இரக்கத்தோடு இருப்போம்.

அன்பு சொற்களில் அல்ல; வாழ்க்கையில் வடிவம் பெறுகின்றது

_______அன்னை தெரேசாபொது அறிவு :

1.தேசிய திட்டக் குழுவின் தலைவர் யார்? 

பிரதமர். 

2. தீப்பற்றாத மரம் எது? 

செம்மரம்.

English words & meanings :

Additional Assistance - கூடுதல் உதவி, 

Adventure Sports - சாகச விளையாட்டு

ஆரோக்ய வாழ்வு :

வெள்ளரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள சுண்ணாம்புச்சத்து ரத்தக்குழாய்களைத் தளர்த்தி,உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

கணினி யுகம் :

Ctrl + Shift + 9 - Unhide the rows. 

Ctrl + 9 - Hide the selected rows

டிசம்பர் 24

 ஈ. வெ. இராமசாமி அவர்களின் நினைவுநாள்

 


பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி[1] , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.[2] இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.

எம். ஜி. ஆர்  அவர்களின் நினைவுநாள்


எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 – திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார்.[1] காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.[2] 1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.


நீதிக்கதை

அன்பை வெளிப்படுத்தும் விதம்

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியை மாணவர்களிடம், அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று கூறி நான்கு மாணவிகளை அனுப்பினார். திரும்பி வந்த மாணவிகளில் ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. 

நான்கு மாணவிகளில் முதலில் கிளம்பிப்போன மாணவி கடைசியில் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். ஆசிரியை அந்த மாணவியிடம் நீ ஏன் எதையும் கொண்டு வரவில்லை என்று கேட்டார்.

அதற்கு அந்த மாணவி, நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன் என்று பதில் கூறினாள். 

மாணவி கூறிய பதிலைக் கேட்டவுடன் ஆசிரியை அந்த மாணவியை அணைத்துக் கொண்டார். அன்பு என்றால் இது தான். ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும் என்றார்.

இன்றைய செய்திகள்

24.12.21

◆மஞ்சப்பை அவமானம் அல்ல; சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. தமிழகத்தில் பிஸாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தல்.

◆வேலூரில் இருந்து 50 கி.மீ. மேற்கு-வடமேற்கு பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. 

◆காய்கறி விலை முதல் பொருளாதார நிலை வரையிலான தகவல்களுடன் அரசின் முக்கிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை தெரிந்துக் கொள்ளும் வகையில் ’முதலமைச்சர் தகவல் பலகை’யை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

◆டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்.

◆தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

◆பூஸ்டர் டோஸ்களால் மட்டும் கரோனா பெருந்தொற்றை ஒழித்துவிட முடியாது; தடுப்பூசி சமநிலை வேண்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.

◆ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: தென்கொரிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

◆புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் ஆட்டம் 'டை'.

Today's Headlines

 🌸The yellow bag is not a shame;  Suitable for the environment.  Chief Minister's insistence on the complete abolition of the use of plastics in Tamil Nadu.

 🌸 There was a mild earthquake in the west-northwest region, a place 50 km from Vellore 

 🌸Chief Minister M K Stalin inaugurated the 'Chief Minister's Information Board' to keep abreast of important government programs and announcements, including information on vegetable prices and economic status.

 🌸 Half-yearly leave for school students from December 25 to January 2: Information from the Minister of School Education.

🌸 Central Road Transport and Highways Minister Nitin Gadkari have said that steps are being taken to set up charging stations for electric vehicles on national highways.

 🌸 Booster doses alone cannot eliminate corona infection;  Vaccine should be in balance -  warning by World Health Organization

 🌸Asian Champions Trophy Hockey: South Korean team won the title.

 🌸Pro Kabaddi League: Tamil Talawas- Telugu Titans Game 'Tie'.
 Prepared by

Covai women ICT_போதிமரம்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive