Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

வகுப்பறை சுத்த பணிகளில் மாணவர் ஈடுபடக்கூடாது


 

பள்ளி வகுப்பறைகளையும் கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்' என பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலம் அடுத்த கீழஉரப்பனூரைச் சேர்ந்தவர் ஆதிசிவன். இவரது மகன் சிவநிதி.திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். 2015ல் ஜூன் மாதம் வகுப்பறையை சுத்தம் செய்யும்படி வகுப்பாசிரியர் சிவநிதிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி சுத்தம் செய்த போது டெஸ்க் விழுந்து சிவநிதியின் இடதுகால் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.வகுப்பறையை சுத்தம் செய்யக் கூறியதால் தான் தன் மகன் காயமடைந்ததாகவும் இது மனித உரிமை மீறல் எனக் கூறியும் ஆதிசிவன் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

விசாரித்த ஆணையம் சுத்தம் செய்ய போதுமான ஊழியர்களை நியமிக்காததற்கு பள்ளி நிர்வகம் தான் காரணம் எனக்கூறி பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரங்களுக்குள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும் பள்ளிகளில் வகுப்பறைகள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்யும் விதமாக முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிக்க பள்ளி கல்வி இயக்குனரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive