Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

TRB - முதுகலை ஆசிரியர் பணி தேர்வர்கள் கோரிக்கை!

 

ஆசிரியர் தேர்வு வாரியம் 2018 - 19ல் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை காலி பணியிடங்களில் நியமிக்க முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் அறிக்கை: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2018 - 19ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமன தேர்வு 2019 ஆக. 28 29ல் நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் பட்டனர்.பின் தேர்ச்சி பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.

அதில் அடுத்த நிலையில் உள்ள பிற தேர்வர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து பள்ளி கல்வி துறையை அணுகிய போது இரண்டாம் பட்டியல் கேட்டிருப்பதாகவும் தேர்வு வாரியம் தாமதம் செய்வதாகவும் கூறினர்.

சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த தங்களை வைத்து காலியிடம் நிரப்பப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். இந்நிலையில் தேர்வு வாரியம் இந்தாண்டு செப்டம்பர் மாதம் 2207 முதுகலை ஆசிரியர்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் 2774 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தற்காலிகமாக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.எனவே 2018 - 19ல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களால் காலி பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive