NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கற்றல், கற்பித்தல் மேம்படுத்த ஆய்வுக்கூட்டம்: கல்வித்துறை அதிகாரிகள் நியமனம்: பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு.

 

கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேம்படுத்தும் விதமாக 2 நாட்கள் மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் பணிகளை மேற்கொள்ள இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் நியமனம் செய்து பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:


பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு மண்டல வாரியான ஆய்வுக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் கலந்து கொண்டு ஆய்வு செய்ய இருக்கின்றனர்.

இவ்வாய்வுக்கூட்டம் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆய்வு கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்தில் இரண்டு நாட்கள் களப்பணி நடத்திடவும், இரண்டாம்நாள் பிற்பகுதியில் ஆய்வுக்கூட்டம் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அக்கூட்டத்தின் இரண்டு நாட்களிலும் சார்ந்த துறைத் தலைவர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பள்ளி பார்வை மேற்கொள்வர். இரண்டாம் நாள் பிற்பகுதியில் பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் தொடர்புடைய கள அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மூன்றாம் கட்டமாக 3ம் தேதி மற்றும் 4ம் தேதி விழுப்புரத்தில் மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

மண்டல வாரியான ஆய்வுக்கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். விழுப்புரம், சென்னை, தொடக்க கல்வி இயக்ககம் இயக்குநர் அறிவொளி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், இணைஇயக்குநர் அமுதவல்லி, பள்ளி கல்வி ஆணையரகம், இணை இயக்குநர் ராமசாமி, கடலூர் மாவட்டத்திற்கு பள்ளிக்கல்வி ஆணையர், நந்தகுமார், பள்ளிக்கல்வி ஆணையரகம், இணை இயக்குநர், (தொழிற்கல்வி) ஜெயக்குமார், ஆசிரியர் தேர்வு வாரியம், கூடுதல் உறுப்பினர், இணை இயக்குநர் சுகன்யா, திருவண்ணாமலைக்கு இல்லம்தேடி கல்வி, சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணை இயக்குநர் குமார், மதுரை, கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் செல்வராஜ், திருவாரூர் ஆசிரியர் தேர்வு வாரியம் உறுப்பினர் உஷாராணி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநில திட்ட இயக்ககம் இணை இயக்குநர் வாசு, அரசு தேர்வுகள் இயக்ககம் இணை இயக்குநர் (இடைநிலை) செல்வகுமார், செங்கல்பட்டுக்கு மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இயக்கநர் லதா, பள்ளி கல்வி ஆணையரகம் இணை இயக்குநர் நரேஷ், மெட்ரிக் பள்ளி இயக்ககம் இணை இயக்குநர் ஆனந்தி மேற்கண்ட அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களை 3ம் தேதி மற்றும் 4ம் தேதி ஆய்வுசெய்து 4ம் தேதி பிற்பகல் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆக்கப்பூர்வமான கருத்துகளை வழங்க வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive