Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நோயாளிகளை நிற்க வைத்து ட்ரிப்ஸ் ஏற்றிய செவிலியர் நிரந்தர பணி நீக்கம்

செவிலியர் பணிநீக்கம்

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை நிற்க வைத்து ட்ரிப்ஸ் ஏற்றிய வீடியோ வைரலான நிலையில்

நோயாளிகளை நிற்க வைத்து ட்ரிப்ஸ் ஏற்றிய செவிலியர் ரஞ்சிதாவை நிரந்தர பணி நீக்கம் செய்து மருத்துவமனை முதல்வர் உத்தரவு.

செவிலியர்: பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கி நடவடிக்கை

செவிலியர்கள் நோயாளிகளிடம் அலட்சியமாகவும், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

நோயாளிகளை நிற்க வைத்து ட்ரிப்ஸ் ஏற்றிய செவிலியர்: பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கி நடவடிக்கை


நோயாளிகளுக்கு ஏற்றப்படும் டிரிப்சை நின்றபடியே பிடித்துள்ள உறவினர்கள்

நோயாளிகளை நிற்க வைத்து ட்ரிப்ஸ் ஏற்றிய செவிலியர் குறித்த வீடியோ வைரலான நிலையில் அவரை பணியிலிருந்து விடுவித்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது நோயாளிகள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளில் நோயாளிகளை இவ்வாறுதான் ஊழியர்கள் நடத்துகின்றனர் என்றும் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளனர்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நிற்க வைத்து ட்ரிப்ஸ் ஏற்றிய செவிலியர் பணியிலிருந்து விடுவித்து மருத்துவமனை முதல்வர் பூவதி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்,  பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வெளி மற்றும் உள் நோயாளிகளாக சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். விபத்துக்களில் சிக்குபவர்கள், இதய நோயாளிகள் உட்பட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குதான் பொதுமக்கள் வருகின்றனர். 

இங்கு பணியாற்றும் செவிலியர்கள் நோயாளிகளிடம் அலட்சியமாகவும், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. மேலும் அவசர சிகிச்சைக்காக வருபவர்கள் ஸ்கேன் எடுத்துவிட்டு ரிசல்ட்டை வாங்க படாதபாடு படும் நிலைதான் இருக்கிறது. உள்நோயாளிகளுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் மறுநாள் காலையில் தரப்படும். காலை 8 மணியிலிருந்து ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்க நோயாளிகளின் உறவினர்கள் வரிசையில் வெகுநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. ஸ்கேன் ரிப்போர்ட்டை தருபவர்கள் சாவகாசமாக 10 மணி அளவில்தான் வருகின்றனர். இதனால் டாக்டர்கள் கடுமையாக சத்தம் போடுகின்றனர் என்று நோயாளிகள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். இது ஒருபுறம் இருந்தால், இங்குள்ள பன்னோக்கு சிறப்பு சிகிச்சை மைய கட்டிடத்தில், புற்றுநோய்க்கான சிகிச்சைப்பிரிவில், பெண் செவிலியர் ஒருவர், சிகிச்சை பெறும் நோயாளிகளை அலட்சியமாக கையாளுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், நோயாளிகளை செவிலியர் தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டு, நோயாளிகளை வரவழைத்து, அவர்களை நிற்கவைத்தப்படி, குளுக்கோஸ் (ட்ரிப்ஸ்) செலுத்தி அனுப்பியுள்ளார். அதில்  குளுக்கோஸ் ஏற்றிக்கொண்ட பிறகு, நோயாளிககளை, அவர்களின் உறவினர் கையில் குளுக்கோஸ் பாட்டிலை சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டது. அத்துடன் குளுக்கோஸ் போட்டுள்ள நோயாளி ஒருவர், பாட்டிலில் பிரச்னை இருப்பதாக கூறிய போது, செவிலியர் அவரை சரமாரியாக திட்டி அனுப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் நேற்று வெளியாகி வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி விசாரணை நடத்தினார். விசாரணையில்,  புற்றுநோய் சிகிச்சை பிரிவில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், தற்காலிகமாக பணியாற்றும் செவிலியர் ஆர்.ரஞ்சிதா என்பவர்தான் இவ்வாறு நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்டவர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை பணியில் இருந்து நிரந்தரமாக விடுவித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி நேற்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து நோயாளிகள் தரப்பில் கூறுகையில், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். உடல் வலியுடன் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மனவேதனையை அளிக்கும் மருத்துவமனையாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. ஸ்கேன் ரிப்போர்ட் மட்டுமின்றி பல்வேறு சிகிச்சைகளுக்கான சோதனைகள் வாங்குவதற்குள் பெரும் பாடாகி விடுகிறது. இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகளையும், அவர்களுடன் வரும் உறவினர்களையும் தரக்குறைவாக பேசுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு நோயாளிகள் தரப்பில் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளனர். இதுகுறித்தும் மருத்துவமனை முதல்வர் பூவதி நடவடிக்கை எடுப்பாரா? என்பதுதான் மக்கள் மனதில் எழுந்துள்ள எதிர்பார்ப்பு.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive