Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப 'டிவி'களுக்கு தடை

     'பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை, 'டிவி'கள் நேரடியாக ஒளிபரப்பக் கூடாது' என, தகவல், ஒலிபரப்பு துறையிடம், மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.தகவல், ஒளிபரப்பு துறைக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், 'தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொண்டு, அதற்கான, கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளது. 
 
         ஏற்கனவே, இது போன்ற அறிவுரைகளை, 2009, 2011 மற்றும் 2013ம் ஆண்டுகளில், உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அதற்கு பிறகும், 'டிவி'களின் செயல்பாட்டில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. ஜம்மு - காஷ்மீரில், எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நம் வீரர்களின் தாக்குதலை, பல ஆங்கில செய்தி, 'டிவி'கள் காண்பிக்கின்றன.

மும்பை தாக்குதல் நேரடி ஒளிபரப்பு:



          பரபரப்பான காட்சிகளை, பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக, 'டிவி' சேனல்கள், தங்களின் அதிகார வரம்பை மீறி செயல்படுவது, சமீப காலமாக வாடிக்கையாகி விட்டது. கடந்த 2008ல், மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை, நம் வீரர்கள் எதிர்கொண்ட காட்சிகளை, பல இடங்களில் படம் பிடித்து, 'எடிட்' செய்யாமல், அப்படியே நேரடியாக, ஆங்கில செய்தி, 'டிவி' சேனல்கள் ஒளிபரப்பின. குறிப்பாக, நரிமன் பாயின்ட் என்ற இடத்தில், யூதர்களின் கோவிலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் நம் வீரர்களின் நடவடிக்கைகள், 'டிவி'களில் காட்டப்பட்டன. இதை பார்த்த பயங்கரவாத தலைவர்கள், மும்பையில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு அந்த தகவல்களை தெரிவித்ததால், தாக்குதல் நீண்ட நேரம் நீடித்தது. அதன் பிறகும், பல நேரங்களில், பயங்கரவாதிகளின் பேட்டி, அவர்களின் பயிற்சி முறை, அவர்கள் வணங்கும் முறை போன்றவற்றை காட்டியது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive