NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பில் தாமதம்! பொது 'கவுன்சிலிங்'கில் ஏற்படும் சிக்கல் தவிர்க்கப்படுமா?

       மதுரை தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படுவதால் பொது 'கவுன்சிலிங்'கின் போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.

          மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறைக்கு உட்பட்ட 15 கல்வி யூனியன்களில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்கு டிச.31ம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு ஜன.1ல் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியிட வேண்டும். பட்டியல் ஜன.,யில் வெளியிட்டால் தான் தவறுகள் இருந்தால் அதை சரி செய்து ஏப். அல்லது மே மாதம் நடக்கும் பொது 'கவுன்சிலிங்'கில் ஆசிரியர்கள் பங்கேற்க முடியும்.குறிப்பாக பட்டியல் தயாரிப்பின்போது ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள், பணிவரன்முறை செய்யப்பட்ட நாள், உயர்கல்வித் தகுதி உட்பட கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் ஜன., முடியும் தருவாயிலும் நேற்றுவரை தொடக்க கல்வித் துறையின் பட்டியல் தயாரிப்பு பணி மந்தமாக உள்ளதாக ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் ஜன.1ல் முன்னுரிமை பட்டியல் வெளியிட்டால் தான் அதை சரிபார்த்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அனுமதி பெறுவது முதல் பொது 'கவுன்சிலிங்'கில் பங்கேற்பது வரை பல கட்ட பணிகளை சரியான காலத்திற்குள் முடிக்க முடியும். இல்லையென்றால் 'கவுன்சிலிங்'கின் போது ஏதாவது ஓர் சிக்கல் ஏற்பட்டு பதவி உயர்வு பாதிக்கும். பின் கோர்ட்டில் வழக்குகள் தொடர வேண்டி வரும். எனவே முன்னுரிமை பட்டியல் தயாரிப்பு பணியில் தாமதத்தை தவிர்த்து விரைவில் வெளியிட வேண்டும் என்றார்.




3 Comments:

  1. 29-01-2015 ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பக்கோரி உண்ணாவிரதம்கடந்த ஆண்டே நிரப்பியிருக்க வேண்டிய ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.இதுவரை பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பல்வேறு தலைவர்கள் குரல் கொடுத்தும் அரசு மவுனம் சாதித்துவருகிறது.பணிநியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்கள் பலமுறை சென்னை சென்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.முதல்வரின் தனிபிரிவில் மனு கொடுத்தனர் பயனில்லை.SC-ST கமிஷனிடம் மனு கொடுத்து அவர்கள் அரசுக்கு கடிதம் அனுப்பியும் பலனில்லை.தற்போதைய நிலவரப்படி அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினால் பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும்.ஆனால் அவருக்கு நேரமில்லையா அல்லது உத்தரவு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.விரக்தியில் உள்ள ஆசிரியர்கள் சென்னை கமிஸனரிடம் அனுமதி பெற்று சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 29-01-2015 அன்று உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்துள்ளனர்.ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறையில் பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென உங்கள் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆதிதிராவிடர் நலத்துறை அகிலன் 8608224299கள்ளர் நலத்துறை ஜெகன் 9442880680

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம் ஸ்ரீரங்கம் தொகுதி மனுத்தாக்கல் ;பிராச்சாரத்துக்கு தாயாராகுவோம்,பணிநியமனத்தை வென்றெடுப்போம்

    இன்று மதியம் 3மனிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழக மாநில தலைவர் செல்லத்துரை திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் மனுதாக்கல் செய்தார்...

    ஆசிரியர் பணிநியமங்களில் பின்பற்றப்படும் வெய்ட்டேஜ் என்னும் ஆசிரியர்களின் இரத்தம் குடிக்கும் முறையை எதிர்த்தும்,2014ம் ஆண்டு முதலில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பணிநியமனம் செய்ய வலியுறுத்தியும் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளோம்...

    1.இன்று தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் தான் பார்த்த தனியார் பள்ளி வேலையையும் இழந்து,சமூகத்தில் ஒதுக்கப்பட்டு மரணவாசலின் ஓரத்தில் நிறபதை யார் அறிவார்??

    2.என் அருமை ஆசிரியை சகோதரிகள் ஏமாற்றத்தால் திருமணம் தடைபட்டு முதிர்கன்னிகளாக இருக்கும் அவலநிலையை யார் அறிவார்???

    3.ஒவ்வொரு சமூக பிரச்சனையும் தீர்ப்பதற்கு உயர்நீதிமன்றமே முன்வருகிறது ஆனால் பல லட்சம் ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து இருட்டறையில் புலம்புவது நீதிதேவதைக்கு கேட்கவில்லையா??இதை தீர்க்க வழி இல்லையோ??

    4.தினமும் அரசு நமக்கு செய்த வெய்ட்டேஜ் துரோகத்தால் சாப்பிடாமல்,தூங்காமல் கிறுக்கனாக மாறிக்கொண்டிருக்கும் அவத்தை யார் அறிவாரோ???

    அலையாய் புறப்படு என் ஆசிரியர் இனமே!!

    திரண்டு வா திருச்சிக்கு!! திணரட்டும் திருச்சி ..

    நம் பிரச்சரம் வெய்ட்டேஜை குறைபாடுகளை மக்களுக்கு புரிய வைத்து நீதி வேண்டும் என்பதே...

    உணைவோடு இந்த செய்தியை வாட்ஸப்,பேஸ்புக், பத்திரிக்கையாளருக்கு, மீடியாவுக்கு, அனைவருக்கும் உடனடியாக பகிரவும்...

    எழுச்சியோடு
    செல்லத்துரை மாநிலத்தலைவர் செல்:98436 33012

    பி.ராஜலிங்கம் மாநிலப்பொருளாளர் செல்/வாட்ஸப் 9543079848

    Share pls pls pls lot...

    ReplyDelete
  3. please install income tax softwarefor 2015 just like last year

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive