NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.08.18

திருக்குறள்


அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை.

விளக்கம்:

பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.

பழமொழி

Humility is the best virtue

 பணிவு என்பது மிகச்சிறந்த பழக்கம்

இரண்டொழுக்க பண்பாடு

1.  எங்கள் ஊரில் உள்ள குளம், குட்டையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பேன்.

2. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.

 பொன்மொழி

தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும்.

   - சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு

1. 2014 ஆசிய விளையாட்டு போட்டிகள் எந்த நாட்டில் நடைபெற்றது ?

 தென்கொரியா 
                         
 2.தற்பொழுது 2018 ஆசிய விளையாட்டு போட்டிகள் எந்த
 நடைபெற்றுவருகிறது ?

 இந்தோனேசியா

English words and. Meanings

Quickly     விரைவாக
Queries.    விசாரிப்பு
Quarter.     கால்பகுதி
Quality.       தரம்
Quantity.     அளவு




நீதிக்கதை

  வேதபுரி என்ற நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் தனக்கு பரிசாக கிடைத்த குரங்கு ஒன்றை ஆசையா வளர்த்து வந்தார். அந்த குரங்கும் அந்த அரசரின் மீது மிகவும் பாசமாக இருந்தது.

ஒரு நாள் ராஜா வழக்கம் போல அரண்மனைத் தோட்டத்தில் உலாவப் போகும் பொழுது குரங்கையும் கூடவே அழைத்துச் சென்றார்.

செல்லும் வழியில் ஒரு முட்புதர்க்கு நடுவில் பாம்பு ஒன்று இருப்பதை குரங்கு கவனித்தது. உடனே அந்த குரங்கு தாவி குதிச்சு பாம்பு இருப்பதை ராஜாவிடம் காண்பித்தது. அந்த பாம்பு ராஜாவை கடிக்கும் முன்பு குரங்கு பாம்பிடம் சண்டையிட்டு பாம்பைக் கொன்றது.

சரியான சமயத்துல ராஜா, பாம்புக் கடியிலிருந்து தப்பித்தார். குரங்கின் எச்சரிக்கை உணர்வையும், விசுவாசத்தையும் பார்த்து ராஜா மிகவும் நெகிழ்ந்தார்.

உடனே, அந்தக் குரங்கையே தன்னோட பாதுகாவலரா நியமிக்க முடிவு செய்தார். அவரோட இந்த முடிவைக் கேட்ட மந்திரிகள் அனைவரும் திகைத்து நின்றனர்.

 அவர்கள் ராஜாவிடம், ‘ராஜா என்னதான் இருந்தாலும் அது ஒரு விலங்குதானே! அதுக்கு மனிதர்கள் மாதிரி பகுத்தறிவோ, முடிவெடுக்கும் திறமையோ இருக்காதே! உங்களோட இந்த விபரீத எண்ணத்தை மாத்திக்கங்க'ன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க.

ராஜா கேட்கறதா இல்லை.

‘என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு அந்தரங்கப் பாதுகாவலனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான தகுதி பாசமும், விசவாசமும்தான்! அது என் குரங்குகிட்ட நிறையவே இருக்கு! அதனால என் பாதுகாவலுக்கு மனிதர்கள் வேண்டாம். குரங்கே போதும்'னு தீர்மானமா சொல்லிட்டாரு.

அன்று முதல் குரங்கு, ராஜாவை விட்டு ஒரு நிமிஷம்கூட விலகாம அவர் எங்கு போனாலும் கூடவே போறதும் வர்றதுமா இருந்தது.

ஒரு நாள் ராஜா குரங்கிடம் ‘எனக்கு தூக்கம் வருகின்றது. நான் கொஞ்ச நேரம் நல்லா தூங்கப் போறேன். என்னை யாரும் தொந்தரவு செய்யாம பார்த்துக்க’ன்னு சொல்லிட்டு தூங்க ஆரம்பித்தார்.

குரங்கும் ரொம்ப அக்கறையா, படுக்கைக்குப் பக்கத்துலேயே இருந்து காவல் காத்தது. அந்த சமயம் பார்த்து அங்க ஒரு ஈ வந்தது. அது ராஜா காது கிட்ட வந்து ‘ஸொய் ஸொய்'ன்னு கத்தி ராஜாவை தொந்தரவு செய்தது. குரங்கு ‘சூசூ'ன்னு துரத்துச்சு. கொஞ்ச நேரம் கழிச்சி, அந்த ஈ திரும்பவும் அங்கேயே சுத்தி சுத்தி வந்துக்கிட்டே இருந்தது. குரங்குக்கு கோபம் தாங்கல. ஈக்குத் தகுந்த பாடம் புகட்டணும்னு தீர்மானிச்சிடுச்சு. அது ராஜாவோட வாளை கையில் எடுத்தது. இந்த முறை ஈ வந்தா அதை ஒரே போடு போட்டு ரெண்டு துண்டாக்கிட வேண்டியதுதான்னு முடிவு செய்தது.

நடப்பது எதுவும் தெரியாத ராஜாவோ பாவம் நிம்மதியா தூங்கிக்கிட்டிருந்தாரு. ஈ திரும்பவும் வந்தது. இந்தத் தடவை அது ராஜாவோட கழுத்துக்கு மேல பறந்தது.

தயாராக இருந்த அந்த குரங்கும் ஈயை ஒரே வெட்டா வெட்டிடுச்சி. ஐயோ! என்ன பரிதாபம்! ஈ பறந்து தப்பிச்சிடிச்சு. ராஜா தலை துண்டாகிப் போச்சு. இப்படியாக, ராஜா தன்னோட சொந்த பாதுகாவலனாலயே கொல்லப்பட்டுட்டாரு.

ராஜா இறந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு அந்த நாட்டு மக்களும் மந்திரிகளும் சோகத்துல மூழ்கிட்டாங்க. அவங்க 'புத்திசாலியான எதிரியைவிட முட்டாளான தோழன்தான் ரொம்ப ஆபத்தானவன்'னு ராஜாவுக்குத் தெரியாமல் போய் விட்டதே என்று புலம்பினார்கள்.

இன்றைய செய்திகள்

27.08.18

* ஈரான் நாட்டில் ரிக்டேர் 6.1 அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இருவர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

* இப்போது பயன்படுத்தி வரும் டெபிட், ஏடிஎம் கார்டுகளை கொடுத்துவிட்டு, ‘சிப்’ அடிப்படையிலான புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வாடிக்கையாளா்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்துள்ளது. இதற்கு டிசம்பா் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

*  தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்.24-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் செப்.5 முதல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

* ஆசியப் போட்டி தடகளத்தில் ஆடவர் குண்டு எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங்.

* ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் பாட்மிண்டண்
அரையிறுதிக்கு இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

Today's Headlines


🌸The Defence Acquisition Council (DAC), which met on Saturday gave formal approval for procurement of 111 Naval Utility Helicopters worth over Rs. 21,000 crore.🌹
🌸 Chennai:A campaign to raise awareness about the need to abolish non-recyclable plastic began across Tamil Nadu on Saturday, ahead of the ban on disposable plastic from January next year. 🌹
🌸New Delhi:The Centre on Saturday appointed eminent scientist Dr. G. Satheesh Reddy as the Chairman of the Defence Research and Development Organisation (DRDO). 🌹
🌸kodaikanal:Speaking at the inaugural function of “Kodai Kurinji Vizha” here, Minister  Dindigul.C. srinivasan said that the district administration had taken a number of initiatives to promote tourism and thus the Kurinji vizha was yet another show for the visitors.🌹
🌸Stone inscription on Pallava king found The inscription revealed how a Pallava King created a channel from a water body to irrigate an agricultural land in the village.🌹
🌸 Asian games:India bags 7gold,10silver,and19bronze, Totally 36 medals and ranks 9th.

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive