அனைத்து மருந்து, மாத்திரைகளும் பார்கோடு அவசியம்: ஏப்ரல் 1 முதல் அமல்


ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து மருந்து, மாத்திரைகளுக்கும் பார்கோடு அச்சிடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பார்கோடில் மருந்து பெயர், தயாரிப்பாளர், சந்தை விலை, தயாரிப்பு, காலாவதி தேதிகள் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரு பொருள், எங்கு, எப்போது தயாரிக்கப்பட்டு உள்ளது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள, பார்கோடு தொழில்நுட்பம் உதவுகிறது.

 சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரையுடன், நைஜீரியாவில் இறக்குமதியான போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 சீனாவில் தயாரிக்கப்படும் இத்தகைய தரக்குறைவான மருந்துகள், இந்தியாவில் தயாரானவை என்று கூறி, நைஜீரியாவில் அதிக விலைக்கு விற்கப்படுவது, மத்திய அரசின் கவனத்திற்கு வந்தது.

இதையடுத்து, இந்தியாவில் பயன்படுத்தப்படும் மற்றும் ஏற்றுமதியாகும் அனைத்து மருந்துகளுக்கும் பார்கோடு குறியீடு அவசியம் என, மத்திய அரசு உத்தரவிட்டது.

 இதன் மூலம், போலி மருந்துகளை அடையாளம் காணவும், தரமான இந்திய மருந்துகளின் சிறப்பு சீர்கெடாமல் இருக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.

Share this

0 Comment to "அனைத்து மருந்து, மாத்திரைகளும் பார்கோடு அவசியம்: ஏப்ரல் 1 முதல் அமல்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...