இலவச கணினி பயிற்சி

பத்தாம் வகுப்புக்கு மேல் படித்த மாணவ -மாணவியருக்கான, ஒரு வாரம் இலவச கணினி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உதவிகள், தென்சென்னை, எம்.பி., அலுவலகத்தில் நடைபெற உள்ளது.தென்சென்னை, எம்.பி., அலுவலகம், 116, சாந்தோம் நெடுஞ்சாலை, பட்டினப்பாக்கம் என்ற முகவரியில் உள்ளது.


 இங்கு, 21ம் தேதி முதல், மாணவ - மாணவி யருக்கான ஒரு வாரம், இலவச கணினி பயிற்சி வழங்கப்படும்.இப்பயிற்சியை, 'சதர்லேன்ட்' என்ற நிறுவனம் வழங்குகிறது. பயிற்சிக்கு பின், வேலைவாய்ப்பு உதவியும் செய்யப்படும்.


தென்சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, 10ம் வகுப்புக்கு மேல் படித்த மாணவர்கள் பங்கேற்கலாம்.பயனாளிகள், எம்.பி., அலுவலகத்தில், விண்ணப்பம் பெற்று முன்பதிவு செய்ய வேண்டும். காலை, 10:00 மணிமுதல் மாலை, 5:00 மணி வரை அலுவலகம் செயல்படும்.

Share this