2019 -இல் 16 வகை தேர்வுகள் TNPSC அறிவிப்பு

அரசு துறைகளில் 4,365 காலியிடங்களை நிரப்பும் வகையில் 16 வகை தேர்வுகள் இந்த புதிய ஆண்டில் நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,யின் சார்பில் வருடாந்திர தேர்வு அட்டவணையை, செயலர் நந்தகுமார் நேற்று வெளியிட்டார்.


அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2016ல் 17 தேர்வுகள் நடத்தப்பட்டு 6,383 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன; 2017ல் 15 ஆயிரத்து எட்டு காலியிடங்களுக்கு 22 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன; இன்னும் இரண்டு தேர்வுகள் நடத்த வேண்டியுள்ளது. அதேபோல் 2018ல் 15 தேர்வுகள் நடத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில் இந்த புதிய ஆண்டில் 4,365 காலியிடங்களை நிரப்ப 16 வகை போட்டி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. கால அட்டவணையில் குறிப்பிடும் காலங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this

0 Comment to " 2019 -இல் 16 வகை தேர்வுகள் TNPSC அறிவிப்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...