அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்ததால், பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன.தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில், இரண்டாம் பருவத் தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வு, டிச., 10 முதல், 22 வரை நடந்தன. இதையடுத்து, டிச., 23 முதல், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டது.

விடுமுறை, இன்றுடன் முடிகிறது. நாளை, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறந்த தும், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத் தேர்வு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள் வழியாக, புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. நாளை பள்ளிகள் திறந்ததும், அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கி, தாமதமின்றி பாட வகுப்புகளை நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Share this

0 Comment to " அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...