இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவதை கைவிடுக -தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்


இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு
மாற்றுவதை கைவிடுக -தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை
அங்கன்வாடி மற்றும் மழலையர் வகுப்புகளுக்கு  புதிய ஆசிரியர்களை நியமிக்காமல் பணியிலிருக்கும் இடைநிலை ஆசிரியர்களை  ஒன்றிய அளவில் இளையவரான ஒருவரை, அல்லது அருகில் உள்ள ஒன்றியத்தில் இருந்து ஒருவரை இரண்டு மணிநேரம் சென்று பாடம் நடத்தவேண்டும் என்ற அரசின்
இந்த நடவடிக்கையை உடனே கைவிட  தமிழ்நாடு  ஆசிரியர் சங்கம் அரசை வலியுறுத்துகிறது..
மேலும்,இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவது என்பதை உடனே கைவிட்டு அங்கன்வாடி மற்றும் மழலையர் பள்ளிகளில் பணி புரிவதற்காக  மாண்டிச்சோரி பயிற்சிப்பெற்று பல்லாயிரம் கணக்கில்  ஆசிரியைகள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கையில்
இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பள்ளிகளுக்கும், பட்டதாரி ஆசிரியர்களை தொடக்கப் பள்ளிகளுக்கும், மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர்களை கீழ்வகுப்புகளுக்கும் பயிற்றுவிக்க அனுப்புவதனை அரசு கைவிடவேண்டும்.இதனால் ஆசிரியர்கள்
மன உளைச்சலுக்கு ஆளாகி, கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்படும்
என்பதால் அவரவர் தகுதிக்கான வேலையில் இருந்து கீழ் நிலைக்கு மாற்றுவது என்பது முற்றிலும் முரணான ஒன்று.மேலும்.ஆசிரியர்களை அவமதிக்கும் செயலாகும் கல்வித்துறையினை சீரமைப்பதாக எண்ணி.எதிர்காலத்தில் கல்வித்துறை சீரழிந்துப் போகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ஆகையால்
அரசின் தவறான இந்த
உத்தரவை  உடனடியாக திரும்பபெற வேண்டுமென்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வலியுறுத்தி வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் - 98845 86716

Share this

0 Comment to "இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவதை கைவிடுக -தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...