மதுரையில் அரசு மற்றும் உதவிபெறும்
பள்ளிகளில் இயக்குனர்கள் குழு நடத்தயிருந்த 'மெகா' ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது.
சி.இ.ஓ., டி.இ.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளின் பள்ளி ஆய்வுகள் வழக்கமான ஒன்று.
இந்தாண்டு முதல் சமக்ர சிக்ஷான் அபியான் திட்ட இயக்குனர்கள் (எஸ்.பி.டி., ஆய்வு) சுடலைகண்ணன் தலைமையில் குப்புசாமி, வெங்கடேசன் மற்றும் ஐந்து இணை
இயக்குனர்கள் உட்பட 20 அதிகாரிகள் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே நேரத்தில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.
முதல் ஆய்வு திருச்சியில் நடந்தது. 2 வது ஆய்வு மதுரையில் இன்றும் (ஜன.,8) நாளையும் (ஜன.,9) நடக்க இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், "பள்ளி செயல்பாடு, மாணவர்களின் கல்வி தரம், எளியமுறையிலான படைப்பாற்றல் கல்வி, கற்பித்தலில்
ஆசிரியரின் புதிய
அணுகுமுறை குறித்து ஆய்வு நடக்கும்.
பள்ளிகள் தயாராக இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பின் நடக்கும்,'' என்றார்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments