டிஜிட்டல்' வருகைப்பதிவு - முழுமையாக அமுல்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு CEO அறிவுரை


'டிஜிட்டல்' வருகைப்பதிவு திட்டத்தை
அமல்படுத்தாத, பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் டோஸ் விட்டார்.பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் போன்' வாயிலாக வருகைப்பதிவு மேற்கொள்ளும் வகையில், 'Tn Attendance' என்ற பிரத்யேக 'ஆப்', கடந்த அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது.காலை, மதியம் ஆகிய இரு வேளைகளில், வருகை புரியாதோர் தகவல்கள் பதிவேற்ற வேண்டும். இச்செயலி பயன்படுத்தும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.தொழில்நுட்ப குளறுபடியால், பல பள்ளிகளில் இத்திட்டத்தை பின்பற்றவில்லை. கடந்த நவ. மாதம், மேம்படுத்திய செயலி வெளியிடப்பட்டது. தற்போது வரை, 77 சதவீத அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், இதை பயன்படுத்துகின்றன. மீதமுள்ள, 23 சதவீத பள்ளிகள், இச்செயலியை பயன்படுத்தி வருகைப்பதிவு மேற்கொள்ளவில்லை.செயல்படுத்தாத பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் 'டோஸ்' விட்டார். இரு நாட்களுக்குள் காரணத்தை அறிக்கையாக சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார்

Share this

0 Comment to "டிஜிட்டல்' வருகைப்பதிவு - முழுமையாக அமுல்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு CEO அறிவுரை"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...