மின்வாரியத் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் : விசாரணை நடத்த அண்ணா பல்கலை., துணைவேந்தர் உத்தரவுதமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் பதவிக்கான தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 160 மைங்களில் நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 80,000 பேர் எழுதினர். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பதவிக்கான இந்த தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 120 கேள்விகளுக்கான விடைகளை ஓஎம்ஆர் சீட்டில் குறித்து, தேர்வு அறையிலேயே வினாத்தாள்களையும் பெற்றுக்கொள்ளும் விதிமுறை பின்பற்றது.

இந்நிலையில் இந்தத் தேர்வின் வினாக்களும், விடைகளும் அடங்கிய குறிப்பேட்டின் பக்கங்கள் வாட்ஸ் ஆப் மூலம் பரவி வருவதால் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகியுள்ளதாக தேர்வு எழுதியவர்கள் அளித்தனர். வினாத்தாளில் குறிப்பிட்டிருந்த கேள்விகள் அனைத்தும் அதில் இருந்ததாக கூறப்படுகிறது.

வினாத்தாளை அண்ணா பேராசிரியர் தயாரித்துள்ள நிலையில், வினாத்தாள் வெளியானதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தேர்வு நடைபெறும் முன்னரே தேர்வுத்ததாள் வெளியானதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments