Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிக் டாக் செயலிக்கான தடை நீங்கியது


டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை ஏற்று, சீன நிறுவனத்தின் டிக் டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, டிக் டாக் செயலி நீக்கப்பட்டது. ஆனால் டிக் டாக் செயலியை அறிமுகப்படுத்திய சீன நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து, நாளை மறுநாள் முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.

அன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம், டிக் டாக் செயலி தொடர்பான எந்த முடிவையும் எடுக்காவிட்டால், அச்செயலிக்கான தடை தானாகவே விலகியதாக கருதலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.




Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive