பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.12.21

     

திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

இயல் :பாயிரம்

அதிகாரம் :அறன் வலியுறுத்தல்

குறள் எண்: 35

குறள்: அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொருள்: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கு
குற்றங்களையும் நீக்கியவரால் செய்யப்படுவதே அறமாகும்.

பழமொழி :

A rolling stone gathers no moss

அலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. உழாத நிலமும், இறைக்காத கிணறும், உழைக்காத உடலும் கெடும் இத்தவறை செய்ய மாட்டேன். 

2. இரக்கமில்லாத மனமும், இயற்கை அழிக்கும் நாடும் கெடும். எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளம் ஒரு நாளும் அழிக்க மாட்டேன்.

பொன்மொழி :

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

சுவாமி விவேகானந்தர்:

பொது அறிவு :

1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது? 

டால்பின். 

2. இரண்டு இரைப்பைகளைக் கொண்ட பிராணி எது? 

தேனீ.

English words & meanings :

Nagging - constantly complaining, எப்போதும் முறு முறுத்தல். 

Stumble - to fall over something, எதன் மீதாவது இடறி விழுதல்

ஆரோக்ய வாழ்வு :


கத்தரிக்காய் 2 ஆம் சர்க்கரை நோயைத் தடுக்கும். "மைட்ரோநியூட்ரின்கள்" இருப்பதால் நினைவாற்றல் பெருக்கும். அஸ்கார்பிக் அமிலம் இருப்பதால் இருதய நோய்க்கு சிறந்த மருந்து.

கணினி யுகம் :

Ctrl + shift + B - Search contact list. 

 Ctrl + shift + C - Add contact    

டிசம்பர் 04

கடற்படை தினம் 

1971 இந்திய-பாகிஸ்தான் போரின்இந்தியக் கடற்படையால் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி மீது நடத்தபட்ட கடல் வழி தாக்குதல்களே படைநடவடிக்கை திரிசூலம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற படைநடவடிக்கை மலைப்பாம்பு.இவ்விரு நாடுகளின் சுதந்திரத்துக்கு பின்பு இப்பகுதியில் ஏவுகணைகளை செலுத்தும் கப்பல்கள் மற்றும் கப்பல்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டது இப்படைநடவடிக்கை திரிசூலம் மூலமாக முதல் முறையாக நடந்தேறியது. இந்த படைநடவடிக்கையின் வெற்றியை தான் இந்தியா கடற்படை தினமாக டிசம்பர் நான்காம் தேதியை கொண்டாடுகிறது. 

ஐ. கே. குஜ்ரால் அவர்களின் பிறந்தநாள்

இந்திர குமார் குஜ்ரால் (டிசம்பர் 4 1919 - நவம்பர் 30 2012) இந்தியாவின் 12வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏப்ரல் 1997 இல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டதனால் அரசு கவிழும் நிலை தோன்றியது. தேர்தலை தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸை அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத்தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ரல் 21 ல் பிரதமராக பதவுயேற்றார்.

நீதிக்கதை


நரியும் முட்செடியும்...

கதை :
ஒரு நரியானது செடி, கொடிகள் அடர்ந்த காட்டில் வாழ்ந்து வந்தது. 

ஒரு நாள் நரி வேலியைத் தாண்டும்போது எக்கச்சக்கமான முள்சொடியில் மாட்டிக் கொண்டுவிட்டது. 

தப்பிக்க முயல்கையில் நரியின் உடம்பெல்லாம் காயம், கீறல் பட்டது. அதனை கண்டு நரி மிகவும் கோபமடைந்தது. 

முள்செடியைப் பார்த்து, என்ன செடி நீ, பார் உடம்பெல்லாம் கீறிவிட்டாய். நீயெல்லாம் ஒரு நண்பனா? என்று திட்டியது. 

முள்செடி அதற்கு, நண்பா, நான் முள்செடி. என்னை குத்துவதற்குத் தவிர வேறு எதற்காகவும் படைக்கப்படவில்லை, என்னைக் குறை சொல்வதில் பயன் இல்லை என்றது. 

முதலில் தன்னிடம் உள்ள குறையை பார்க்காமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தக் கூடாது. 

நீதி :
மற்றவர்களை குறை சொல்லும் முன் தன்னிடம் உள்ள குறையை அறிய வேண்டும்.

இன்றைய செய்திகள்

04.12.21

★திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலப் புதைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

★தமிழகத்தில் முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய 10 நினைவுத் தூணுடன் கூடிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.

★பள்ளிகளில் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


★போட்டித் தேர்வில் தமிழ் மொழித் தேர்வைக் கட்டாயமாக்கி தமிழக அரசு ஆணை.

★வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வரும் 5-ம் தேதி ஒடிசா மாநிலம் புரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

★டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, டெல்லி அரசுக்கு 24 மணி நேர கெடு: உச்ச நீதிமன்ற உத்தரவால் பள்ளிகள் மூடல்.

★ஒமைக்ரானால் உலகளவில் இதுவரை உயிரிழப்பு இல்லை: உலக சுகாதார நிறுவனம் தகவல்.


★மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ரைசிங் ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.


★ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: அரைஇறுதியில் இந்தியா-ஜெர்மனி மோதல்.

Today's Headlines

 ★ Paleolithic burial grounds dating back to about 4,000 years have been found at Javadumalai next to Tirupattur.

 ★ Discovery of inscriptions with 10 monuments dating back to 1,000 years are discovered for the first time in Pudukottai district in Tamil Nadu.

 ★ The Department of School Education has ordered that Omicron antiviral measures should be actively implemented in schools.

 ★ Government of Tamil Nadu mandates compulsory Tamil language examination in competitive /eligibility examinations.

 ★ The low pressure area in the Bay of Bengal is expected to cross  near the coastal area of Puri in Odisha on the 5th as it turns into a storm: Indian Meteorological Center information.

 ★ Central, Delhi government gets 24-hour deadline to control air pollution in Delhi: Schools closed by Supreme Court order.

 ★ Omicron has not caused any deaths worldwide so far: World Health Organization data.

 ★ The Rising Star team advanced to the finals of the state basketball championship.

 ★ Junior World Cup Hockey: India-Germany clash in the semi-finals.

 Prepared by

Covai women ICT_போதிமரம்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive