விருதுநகர் மாவட்டம் , விருதுநகர் கல்வி மாவட்டம் , முத்தார்பட்டி , அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தற்செயல் விடுப்பிலும் , பொறுப்பு தலைமையாசிரியரும் பள்ளியில் இல்லாதது கண்டறியப்பட்டது.
பிற ஆசிரியர்கள் சரிவர பள்ளிக்கு
வராமலும் , பள்ளிக்கு வந்தும் வருகைப்பதிவேட்டில் கையொப்பம் இடாமலும்
முழுமையாக வருகைப் பதிவேட்டை முடிக்காமலும் இருந்துள்ளனர்.
பள்ளியில்
பொறுப்புத் தலைமையாசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் இல்லை .
ஆசிரியர்கள் எவரும் பொறுப்பாக கவனிக்காமல் மாணவர்கள் அங்கும் இங்கும்
அலைந்து கொண்டிருந்துள்ளனர்.
அனைத்தும்
மிகவும் கண்டிக்கத்தக்கதும் , பொறுப்பற்ற செயலுமாகும். எனவே , இனிவரும்
காலங்களில் பள்ளியின் தலைமையாசிரியர் விடுமுறையில் இருந்தாலும் அதற்கு
அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர் பள்ளியினை பொறுப்பெடுத்து முழுமையாக வருகைப்
பதிவேட்டை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும்.
பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் எவரும் சொந்த வேலையாக பள்ளி வேலை நேரத்தில் வெளியே செல்ல அனுமதியில்லை.
மேலும்
, மாணவர்களுக்கு கற்பித்தல் பணியினை மட்டும் செவ்வனே செய்திடவும் ,
மாணவர்களின் நலன் கருதி , கோவிட் 19 நிலையான வழிகாட்டு நடைமுறைகளை
பின்பற்றி மாணவர்களை சரிவர கவனிக்கவும் அனைத்துப் பள்ளித்
தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
தவறும்பட்சத்தில் , சார்ந்த ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...