Maazter - The Learning App

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.12.21

   திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: அமைச்சியல்

அதிகாரம்: அவை அஞ்சாமை

குறள் எண்: 727

குறள்:
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.
குறள் விளக்கம்:

அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.பழமொழி :

Love thy neighbour as thyself. 

உன்னைப் போலவே பிறரை நேசி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொய்யுரைத்தால் புகழும் கெடும் எனவே ஒரு போதும் பொய் கூற மாட்டேன்.

2. சோம்பினால் வளர்ச்சி கெடும் எனவே எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முயல்வேன்.

பொன்மொழி :

குற்றத்துக்கு காரணம் அறியாமையே. குற்றம் செய்யாமல் இருக்க விரும்பினால் நல்லவர்களுடன் பழக வேண்டும்.பிறர் நம்மைத் தாழ்வாகக் கருதவோ, நடத்தவோ இடம் அளிக்கக்கூடாது.___பாரதியார்

பொது அறிவு :

1. மன்னார் வளைகுடாவில் கலக்கும் தென்னிந்திய ஆறு எது? 

தாமிரபரணி 

2. சாத்தனூர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? 

தென்பெண்ணை.

English words & meanings :

In the neck of time - just in time, கடைசி நேரத்தில், 

in the dark - not aware of something, சுற்றி நடக்கும் காரியங்கள் குறித்து அறியாமல் இருப்பது

ஆரோக்ய வாழ்வு :

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாக்கும்.


டிசம்பர் 18


ஜெ.ஜெ. தாம்சன்  அவர்களின் பிறந்தநாள்
ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18, 1856 - ஆகஸ்ட் 30, 1940)அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன அணு இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர்.இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.


நா.பார்த்தசாரதி  அவர்களின் பிறந்தநாள்


நா.பார்த்தசாரதி (Na. Parthasarathy, டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்

நீதிக்கதை

மூன்று மீன்கள்

ஒரு சிறிய குளத்தில் மூன்று மீன்கள் வாழ்ந்து வந்தன. முதல் மீன் தனக்குத் துன்பம் வரும் முன்பே தப்பித்துக்கொள்ள விரும்பும். இரண்டாவது மீன் தனக்குத் துன்பம் வரும்போது தப்பித்துக்கொள்ள வழிதேடும். மூன்றாவது மீன் தனக்குத் துன்பம் வந்தால் அந்தத் துன்பத்தை ஏற்றுக்கொள்ளும். இந்த மூன்று மீன்களும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். 

ஒரு நாள் மீனவர்கள் இருவர் குளக்கரைக்கு வந்தனர். குளத்தில் நீர் குறைவாக இருந்ததால் நாளை வந்து குளத்திலுள்ள மீன்களையெல்லாம் பிடித்துச் செல்லலாம் என்று பேசிக்கொண்டனர். 

அதைக் கேட்டுக் கொண்டிருந்த முதலாவது மீன், ஓடிச்சென்று தன் நண்பர்கள் இருவரிடமும் அதைப் பற்றிக் கூறி எச்சரிக்கை செய்தது. பின்னர், அந்தக் குளத்தை விட்டு ஒரு வாய்க்காலின் வழியே வெளியேறி வேறு இடத்துக்குச் சென்று விட்டது. 

இரண்டாவது மீன், நாளை தானே, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றது. மூன்றாவது மீன், வருவது வரட்டும்! எது நடந்தாலும் அது விதிவசம்தான் என்று சும்மா இருந்தது. 

மறுநாள் மீன் பிடிப்பவர்கள் வந்து குளத்திற்குள் வலையினை வீசினர். இரண்டாவது மீனும் மூன்றாவது மீனும் வலையில் அகப்பட்டன. 

இரண்டாவது மீன் மீனவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தான் இறந்துவிட்டது போல் நடித்தது. அதனைப் பார்த்த மீனவர்கள், இறந்த மீன் நமக்கு எதற்கு? என்று நினைத்து, அதனை வலையிலிருந்து எடுத்து மீண்டும் குளத்திற்குள்ளேயே எறிந்து விட்டனர். அந்த மீன் குளத்திற்குள் ஓடிச்சென்று ஒளிந்துக் கொண்டது. 

மூன்றாவது மீன் வலைக்குள்ளேயே துள்ளிக்கொண்டிருந்தது. அதனை அவர்கள் பிடித்துச் சென்றனர். 

நீதி :
ஒரு சிக்கல் வரும் முன்னர் தப்பித்துக்கொள்பவரும் சிக்கல் வருகின்றபோது தப்பித்துக்கொள்பவரும் எப்போதுமே இன்பமடைவார்கள

இன்றைய செய்திகள்

18.12.21

◆தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.

◆வங்கிகள் தனியார்மயத்தை கண்டித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம்.


◆இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

◆முப்படைத் தளபதிகள் குழு தலைவராக ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.


◆தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்; பெருந்தொற்று பேராபத்தின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறோம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

◆உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கம் உறுதி செய்துள்ளார்.

◆ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.

Today's Headlines

  When Tamizhthaai song was sung, everyone should stand up without fail: The government of Tamil Nadu issued the order.

 Bank employees and officials across the country protest against the privatization of banks.


 The Department of School Education has announced that a re competitive examination will be held for those who pass the qualifying examination for the posts of Intermediate Teacher and Graduate Teacher.

  Army Commander General MM.  Naravane has been appointed as the chief of the army staff


 Get vaccinated;  We are in the last episode of the Great Depression: said US President Joe Biden.

 India's Kitambi Srikanth has advanced to the semifinals of the World Badminton Championships.

 ◆ England is 17 for two wickets on Day 2 of the Ashes Test.
 Prepared by

Covai women ICT_போதிமரம்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive