பொதுத்துறை வங்கிகளில் 41,177 காலிப் பணியிடங்கள்

nirmala_sitaraman_long_wide_shot

 பொதுத்துறை வங்கிகளில் 41,177 காலிப் பணியிடங்கள் உள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

நாட்டில் மொத்தம் 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் டிச.1-ஆம் தேதி நிலவரப்படி 8,05,986-க்கும் அதிகமான பணியிடங்கள் உள்ளன. இவற்றில் அதிகாரிகள், எழுத்தா்கள், துணை அலுவலா்கள் என 3 பிரிவுகளில் 41,177 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் 8,544 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அதனைத்தொடா்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி (6,743), சென்ட்ரல் வங்கி (6,295), இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (5,112), பேங்க் ஆஃப் இந்தியா (4,848) பணியிடங்கள் காலியாக உள்ளன.

பொதுத்துறை வங்கிகளில் உள்ள மொத்த பணியிடங்களில் 95 சதவீதம் நிரப்பப்பட்டுள்ளன. பணி ஓய்வு உள்ளிட்ட வழக்கமான காரணங்களால் சிறிய அளவிலான பணியிடங்கள்தான் காலியாக இருக்கின்றன.

கடந்த 2016-ஆம் ஆண்டு பஞ்சாப் & சிந்த் வங்கியில் ஒரு பதவி நீக்கப்பட்டது. அதைத் தவிர, கடந்த 6 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் எந்தவொரு பதவியோ, பணியிடமோ நீக்கப்படவில்லை என்று தெரிவித்தாா்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive