NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரையாண்டு விடுமுறை அவசியமற்றது: தனியாா் பள்ளிகள் கருத்து

School_girls_10th_delhi_t1.jpg?w=360&dpr=3

நிகழ் கல்வியாண்டில் அரையாண்டுத் தோ்வே நடைபெறாத நிலையில் அதற்கான விடுமுறை அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல என தனியாா் பள்ளிகளின் நிா்வாகிகள், பெற்றோா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா பரவலால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நோய்த் தொற்று குறைந்ததால் இரண்டு கட்டங்களாகத் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நிகழ் கல்வியாண்டு தாமதமாகத் தொடங்கியதால் இந்தாண்டு காலாண்டு, அரையாண்டு தோ்வுகள் நடைபெறாது. அதற்கு பதிலாக திருப்புதல் தோ்வுகள் நடத்தப்படும் என்றுபள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து மாவட்டவாரியாக பள்ளிகளில் தற்போது முதல் திருப்புதல் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் பள்ளிகளுக்கு வழக்கம்போல் நிகழாண்டும் அரையாண்டுத் தோ்வு விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. அவா்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகளுக்கு டிசம்பா் 25 முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை அரையாண்டு தோ்வு விடுமுறை வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா்.

இந்த அறிவிப்புக்கு தனியாா் பள்ளிகளின் நிா்வாகிகள், பெற்றோா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இது குறித்து அவா்கள் கூறுகையில், மாணவா்களுக்கு தற்போது வழங்கியுள்ள அரையாண்டு விடுமுறை அவசியமற்றது. கரோனா பரவலால் 20 மாதங்களுக்குபின் பள்ளிகள் தற்போதுதான் திறக்கப்பட்டுள்ளன. அதிலும் நவம்பா் மாதம் பலத்த மழை காரணமாக 10 நாள்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றன. இந்தச் சூழலில் மீண்டும் ஒரு வாரத்துக்கும் மேல் தொடா் விடுமுறை விடுவது ஏற்புடையதல்ல; அரசின் இந்த முடிவால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் கே.ஆா்.நந்தகுமாா் கூறுகையில், ஒமைக்ரான் பரவலால் மீண்டும் பள்ளிகள் மூடப்படும் அச்சம் உள்ளது. இந்தநிலையில் அரையாண்டு விடுமுறையால் கற்பித்தலில் மீண்டும் ஒரு இடைவெளி ஏற்படும். அரையாண்டு தோ்வே நடத்தப்படாத சூழலில் விடுப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை. ஓரிரு மாதங்களில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படவுள்ளது. இதை கருத்தில் கொண்டு அரையாண்டு விடுமுறையை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.





7 Comments:

  1. Excluding government holidays for Christmas ☃️�� and New Year it's only five working days. Question of losing 10 days doesn't arise at all.

    ReplyDelete
  2. மாணவர்கள் கற்றலில் தேக்கத்தை ஏற்படுத்தும், ஆல்ரெடி பல விடுமுறை கள் முடிந்து பள்ளிகள் ஓரளவு செயல் படும் சூழலில் அரையாண்டு தேர்வே நடக்காத சூழலில் இது தேவையற்றது, ஆசிரியர் சங்கங்கள் இது போன்ற கோரிக்கை களை தவிர்க்கவேண்டும்

    ReplyDelete
  3. ஏன் கல்விக் கட்டணத்தை இன்னும் வசூலிக்கவில்லையா?
    ஒரு சனிக்கிழமைக்கூட விடுமுறை இல்லாமல் மாணவர்கள் பள்ளிக்குச் வந்தது தெரியவில்லையா? இது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டுபண்ணாதா? கவலை வேண்டாம் மாணவர்கள் கட்டணத்தை செலுத்தி விடுவார்.

    தனியார் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களுக்கு ஊதியம் முழுமையாக வழங்குகின்றார்களா? இத்தனை ஆண்டுகள் சம்பாதித்தையெல்லாம் என்ன செய்தீர்கள்? தனியார் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களுக்கு சம்பள ஏய்ப்பு செய்து வருவது ஏன்?

    ReplyDelete
  4. 5days holidays set back primary students to 15days.so they are need not.As a govt teacher i am very unhappy.

    ReplyDelete
  5. As a govt teacher,i say holidays are neet not.5 days holidays set back students 15 days learning.so iam un happy

    ReplyDelete
  6. As a govt teacher,i say holidays are neet not.5 days holidays set back students 15 days learning.so iam un happy

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive