ஒருங்கிணைந்த கல்வி திட்ட தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, மத்திய அரசு நிர்ணயித்த ஊதியத்தை விட, மாநில அரசு குறைவாக வழங்குவதாக, புகார் எழுந்துள்ளது.
மத்திய
அரசு, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை
மேம்படுத்தி, கல்வித்தரத்தை உயர்த்த, பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி
ஒதுக்கி வருகிறது. 2002 முதல், மாவட்ட வாரியாக அலுவலக பணிகள் மேற்கொள்ள,
சிறப்பாசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்களாகவும், தொகுப்பூதிய அடிப்படையில்,
கணக்காளர்கள், கணினி விவர பதிவாளர்கள்,தகவல் நிர்வாக மேலாண்மையாளர்கள்,
கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர்கள் கட்டிட பொறியாளர்கள் அலுவலக
உதவியாளர்கள் பலர் பணிபுரிகின்றனர்.இவர்களுக்கு, மத்திய அரசின் திட்ட
செயலாக்க ஒப்புதல் வாரியம் சார்பில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம்
நிர்ணயிக்கப்படும். இந்த ஊதியத்தை விட, மாநில அரசு குறைவாக வழங்குவதாக,
புகார் எழுந்துள்ளது.
ஒருங்கிணைந்த
கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலசங்க செயலாளர் ராஜ்குமார்
கூறுகையில்,''கடந்த 2010 முதல் 2017 வரை பணியில் சேர்ந்த கணக்காளர்களுக்கு,
16 ஆயிரத்து 167 ரூபாய் ஊதியம் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாநில அரசு, இத்தொகையில் அதிகபட்சமாக மாதம், 2,900 ரூபாய் பிடித்தம்
செய்தே வழங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க, கல்வித்துறை முன்வர
வேண்டும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...