அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கு இலவச பயிற்சி: தமிழக அரசு மையங்களில் ஏற்பாடு

 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கு இலவச பயிற்சி: தமிழக அரசு மையங்களில் ஏற்பாடு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தமிழக அரசு மையங்களில் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2022-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரும் ஜுன் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு, சென்னையில் உள்ள தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் மற்றும் சென்னை, கோவையில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் மற்றும் முதுகலைப் பட்டதாரிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

சென்னை பயிற்சி மையத்தில் 225 முழு நேர தேர்வர்களும், 100 பகுதி நேர தேர்வர்களும் பயிற்சி பெறலாம். அவர்களுக்கு இலவச தங்கும் வசதியுடன், சத்தான உணவு, தரமான நூலகம், காற்றோட்டமுள்ள வகுப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவை, மதுரை மையங்களில் தலா 100 முழுநேர தேர்வர்கள் பயிற்சி பெற முடியும்.

தமிழக அரசின் இலவசப் பயிற்சியை பெற விரும்பும் தமிழக மாணவர்கள் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி டிசம்பர் 11 (இன்று) முதல் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பயிற்சி மையங்களில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழுநேர பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

ஜன. 23-ல் நுழைவுத்தேர்வு

பயிற்சி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஜனவரி 23-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். இதன் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு, தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு சம்பந்தப்பட்ட மையங்களில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive