அரசுப்பள்ளி ஆசிரியைகள் இருவர் சஸ்பெண்ட் - CEO அதிரடி நடவடிக்கை

சேலத்தில் மாணவர்கள் மற்றும் பெற் றோர்களிடம் ஆபாசமாக பேசிய புகாரில், அரசுப்பள்ளி ஆசிரியைகள் இருவரை சஸ் பெண்ட் செய்து சிஇஓ முரு கன் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத் தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட உமையாள்புரத் தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியில் வரலாறு பட்ட தாரி ஆசிரியராக அங்குலட் சுமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக பள்ளியின் தலைமை ஆசிரியரை,அவதூ றாக பேசி வந்துள்ளார்.இதே போல், பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமும், அவர்க ளின் பெற்றோர் குறித்து அவ தூறான வார்த்தைகளை பேசி வந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் பல முறை எச்சரித்தும், இவர் கண் டுகொள்ளவில்லை என தெரி கிறது. இதனிடையே, கடந்த இருதினங்களுக்கு முன்பு பள்ளியில் திரண்ட மாண வர்களின் பெற்றோர்கள், சம் பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காவிட் டா போராட்டம் நடத் தப்படும் என அறிவித்தனர்.

இதனையடுத்து, அவர்க ளிடம் புகாராக பெற்ற பள் ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனுக்கு அனுப்பி வைத்தார். இதேபோல், வாழப்பாடி அடுத்த திருமனூர் அரசுமேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற் பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் இயற்பியல் முதுகலை ஆசிரிய ராக உள்ளவர் மகேஸ்வரி. இவர் பள்ளி மாணவர்களுக்கு சரிவர பாடம் நடத்தாமல் இருந்ததுடன், மாணவர்களை தகாத வார்த்தையால் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆசிரியையிடம் போனில் பெற்றோர்கள் பேசும் போது, அவர்களிட மும் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. அத்துடன், எங்கு சென்று புகார் அளித்தா லும், என்னை ஒன்றும் செய்ய முடியாது என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இத னால் அதிர்ச்சியடைந்த பெற் றோர்கள், இதுதொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் மனு அளித்தனர். அவர் அந்த புகாரை, சிஇஓ-வுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத் திய சிஇஓ முருகன், புகாருக் குள்ளான இரு ஆசிரியை க ளையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.இச்சம்ப வம் சேலம் மாவட்ட கல்வித் துறை வட்டாரத்தில் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive