NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CPS - பிடித்த பணம் முதலீடு விபரம் கண்டுபிடிப்பு! இனியாவது பழைய ஓய்வூதியம் கிடைக்குமா?

 

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களிடமி ருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய் வூதிய நிதி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு முதலீடு செய்யப்பட்டுள்ள விவரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , இனியாவது ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என எதிர்பார்ப்பு எழுந்துள் ளது . 

தமிழக அரசு ஊழியர்களுக்கு , பங்களிப்பு

IMG_20211208_110956

ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003 -ஆம் முதல் அமல்படுத்தப்பட்டுவருகிறது . புதிய ஓய்வூதியத் இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு , மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண் டும் என்ற கோரிக்கை அரசு ஊழி யர்கள் தரப்பில் சுமார் 17 ஆண்டு காலமாக தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வருகிறது . இதனிடையே , 2003 - க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் சுமார் 5.88 லட்சம் பேர் புதிய ஓய் வூதியத் திட்டத்தின் கீழ் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனர் . 

இதன் மூலம் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை 2021 மார்ச் மாதம் வரை ரூ .44,769 கோடி சேர்ந்துள்ளதாக தமிழக அரசின் 2020-21 - ஆம் ஆண்டுக் கான கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

2008 - ஆம் ஆண்டிலிருந்து முன் தேதியிட்டு ( 2003 ) பிடித்தம் செய் யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் தொகை எங்கு முதலீடு செய்யப் பட்டுள்ளது என்ற விவரம் அரசு ஊழியர்களுக்குத் தெரியாமலே இருந்துவந்தது . இதனிடையே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு , பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய் வதற்கான வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழக அரசிடம் கடந்த 2018 நவ . 27 - ஆம் தேதி வழங்கப் பட்டது.

ஆனாலும் , அறிக்கையின் விவரங்கள் தற்போது வரை வெளி யிடப்படவில்லை . ஆயுள் காப்பீட்டு நிறுவனத் தில் ( எல்.ஐ.சி. ) முதலீடு : இந்நி லையில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்பு ஆயுள் காப் பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியி லும் , ஏல அடிப்படையிலான கரு வூலப்பட்டியிலும் ( Treasury Bill ) முதலீடு செய்யப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது . 

கடந்த 2019 - ஆம் ஆண்டு மே 30 - ஆம் தேதி முதல் முறையாக ரூ .2,500 கோடி , ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியில் செலுத்தப்பட்டுள்ளது . தற்போதுவரை 8 தவணைகளில் ரூ .25,510 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது . அதற்கு வட்டியாக ரூ .2,759.13 கோடியுடன் சேர்த்து , மொத்தம் ரூ .28,269.13 கோடி உள் ளது . மேலும் , ஏல அடிப்படையி கருவூலப்பட்டியில் லான தற் போது வரை ரூ .16,500 கோடி முத லீடு செய்யப்பட்டுள்ளது . மொத் தம் ரூ .44,769 கோடி முதலீடு செய் யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது . 

இதன் மூலம் சுமார் ஆண்டுக ளாக அரசு ஊழியர்களிடம் பிடித் தம் செய்யப்பட்ட தொகையின் நிலை குறித்த விவரம் வெளியுல கிற்கு தெரிய வந்துள்ளது . 

இனியாவது கிடைக்குமா ஓய்வூதியம்

: பிடித்தம் செய்யப் பட்ட பங்களிப்பு நிதியின் நிலவ ரம் குறித்து தெரியாததால் , கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வு பெற்றும் , பணியின் போது உயி ரிழந்தும் , விருப்ப ஓய்வு பெற்றும் ஓய்வூதியம் பெற முடியாமல் சுமார் 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . தற்போது பங்களிப்பு நிதி முத லீடு செய்யப்பட்ட விவரம் , தக வல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளதால் , இனி யாவது ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண் டும் என புதிய ஓய்வூதியத் திட்டத் தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள் ளது . இது தொடர்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங் கிணைப்பாளர் பி.பிரெடேரிக் ஏங் கல்ஸ் கூறியதாவது : இந்தியாவில் மேற்கு வங்கம் தவிர பிற மாநிலங் களில் புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுவருகிறது . ஆனால் , தமிழகத்தில் மட்டுமே பழைய ஓய்வூதியத் திட்டம் , புதிய ஓய்வூதியத் திட்டம் என எந்த வொரு முடிவும் இறுதி செய்யப் படாமல் உள்ளது . புதிய ஓய்வூதி யத் திட்டம் ரத்து செய்யப்படும் நிலையில் , தமிழக அரசுக்கு சுமார் ரூ .23,000 கோடி உபரி நிதியாக கிடைக்கும் என்பதையும் சுட்டி காட்டி வருகிறோம் . திமுகவின் தேர்தல் வாக்குறுதிப் படி , புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு , மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முதல்வர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் . இதன் மூலம் , புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற சுமார் 23,000 பேர் உடனடியாகப் பயன் பெறவும் , எதிர்காலத்தில் சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறவும் முடியும் என்றார் .





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive