நலத்துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் ( பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும் ) கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் ஆகிய திட்டங்களுக்குரிய இணைய தளம் 13.12.2021 அன்று திறக்கப்படவுள்ளது
மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதே போல் மத்திய அரசு நிதி ஆதரவிலான ப்ரி மெட்ரிக் ( ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள் ) கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கான இணையதளம் திறக்கப்படவுள்ளதால் மேற்கண்ட திட்டத்தின் கீழ் வாய்ந்த ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆகவே , மாணாக்கர்களும் தமது கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதி சான்று , வருமான சான்று , மதிப்பெண் சான்று , சேமிப்புக் கணக்குப் புத்தக நகல் , ஆதார் எண் உள்ளிட்ட இன்ன பிற ஆவணங்களுடன் 13.01.2022 - க்குள் கல்வி இணையதள வழி ( escholarship.tn.gov.in ) விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் , குறித்த காலக்கெடுவிற்குள் தவறாது விண்ணப்பித்து மாணாக்கர்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி நிறுவனங்கள் மாணாக்கர்களுக்குரிய கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்திடவும் , மாணாக்கர்கள் சார்பான விண்ணப்பங்களை எவ்வித தவறுகளுமின்றி பதிவேற்றம் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...